azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 01 Jul 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 01 Jul 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

Virtuous living, beneficial thoughts, elevating ideals and righteous conduct can confer not only good health, but what is even more precious, Aatmaananda, the ecstatic Awareness of the Reality itself. When one yearns for the happiness and prosperity of all mankind, he or she is blessed with the wisdom and strength to mark out the way and lead them towards it. The person sees one’s chosen God in everyone. Every act of theirs will be as pure, as sincere and as sacred as an offering to God. A very effective way to conquer all sources of physical and mental disease and debility is awareness of one's Divine (Aatmic) Reality. That will bring about an upsurge of Love and Light, for, when one recognises that he or she is the Atma, one would cognize the same Atma in all, and share in the joy and grief, strength and weakness of all. (Divine Discourse, 20 Nov 1982.)
ஒழுக்கமான வாழ்க்கை,நலம் தரும் எண்ணங்கள்,உயர்ந்த லட்சியங்கள் மற்றும் தார்மீகமான நடத்தை ஆகியவை நல்ல ஆரோக்யத்தைத் தருவதோடு மட்டும் அல்லாது, இதை எல்லாம் விட மதிப்பு வாய்ந்த,பரவசமூட்டும் தன்னை உணர்தல் என்ற ஆத்மானந்தத்தை அளித்திடும்.எப்போது ஒருவர் அனைத்து மனித குலத்தின் சந்தோஷம் மற்றும் வளமைக்காக ஏங்குகிறாரோ, அவனோ அல்லது அவளோ, அதற்கான வழியை அறிந்து, அவர்களை,அதை நோக்கி இட்டுச் செல்வதற்கான ஞானத்தையும்,திறனையும் பெறுகிறார்கள். இத்தகைய மனிதன் தனது இஷ்ட தெய்வத்தை ஒவ்வொருவரிடம் காண்கிறான். அவர்களது ஒவ்வொரு செயலும், இறைவனுக்கு அர்ப்பணிக்கப் படும் நைவேத்யத்தைப் போன்று தூய்மையானதாகவும்,உளமார்ந்ததாகவும், புனிதமானதாகவும் இருக்கும்.உடல் மற்றும் மனதின் வியாதி மற்றும் குறைகளின் அனைத்து மூல காரணங்களையும் வெல்வதற்கான மிகச் சிறந்த வழி, ஒருவர் தனது தெய்வீக ஆத்ம நிலையை உணர்வதே ஆகும். எப்போது ஒருவர், அவனோ அல்லது அவளோ, தான் ஆத்மாவே என்று உணருகிறாரோ, அப்போதே அவர் அதே ஆத்மாவை அனைவருள்ளும் கண்டு, அனைவரின் சுகம்-துக்கம்,பலம்-பலவீனம் ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்வதால்,அன்பும், ஒளியும் அவருள் ஊற்றெடுத்து வரத் தொடங்கி விடும்.