azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 29 Jun 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 29 Jun 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

In the Ramayana story, Queen Kaikeyi yields to the selfish wiles of her maid and as a consequence, her lord King Dasaratha lost his life. Rama who she regarded as her very life-breath was exiled into the forest, and Bharatha her son, disowned her for the very same act! She drew on herself the condemnation from all the people in the Kingdom of Ayodhya. The story is an allegory. Dasaratha is the human body with the five senses of perception and the five senses of action - the ten chariots orDasha-ratha. He wedded the Queen, the Mind, and the mind yielded to the servant and caused the downfall. This clearly teaches us the legitimate role of the mind as the master of one’s senses. If the master serves the servants, then, he or she loses their self-respect and falls in the esteem of all. (Divine Discourse, Nov 20, 1982)
ஸ்ரீமத் ராமாயணத்தில்,ராணி கைகேயி அவளது பணிப் பெண்ணின் சுயநல சூழ்ச்சிக்குப் பணிந்தாள்; அதன் காரணமாக அவளது கணவரான தசரத மஹாராஜா தனது உயிரை இழந்தார். தனது உயிர் மூச்சாகவே கருதிய ஸ்ரீராமர் காட்டுக்கு அனுப்பப் பட்டார்; அவளது மகனான பரதன் அந்தச் செயலுக்காகவே அவளை நிராகரித்து விட்டார் !அயோத்தி ராஜ்யத்தின் அனைவரின் நிந்தனைக்கும் அவள் ஆளானாள். இதை ஒரு உவமையாக எடுத்துக் கொள்ள வேண்டும். தசரதர் என்பது பஞ்ச ஞானேந்திரியங்களும், பஞ்ச கர்மேந்திரியங்களும் கொண்ட, அதாவது பத்து ரதங்களைக் கொண்ட மனித உடலை ஒத்தது- தஸ-ரத. அவர் மனம் எனும் ராணியை மணந்தார்; அந்த ராணி தனது வேலைக்காரியின் ஆலோசனைக்கு இடம் கொடுத்ததால்,வீழ்ச்சியடைய நேர்ந்தது.ஒருவரது புலன்களுக்கு எல்லாம் அதிபதி மனமே என்பதை இது நமக்கு தெளிவாக அறிவுறுத்துகிறது.ஒரு எஜமானர் , வேலைக்காரருக்கு சேவகம் செய்தால், அவரோ அல்லது அவளோ தனது சுயமரியாதையை இழந்து, அனைவரின் மதிப்பு ஸ்தானத்திலிருந்து வீழ்ச்சி அடைவார்.