azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 28 Jun 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 28 Jun 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

Co-operation among individuals grouped as a society guarantees security and stability. It is called,Shri Rama Raksha(protection), the mark of Divine Grace. The surest sign of awareness of one’s Divine Nature is the recognition of the bond of kinship with other beings. This bond has now snapped, and as a result, life has been rendered meaningless. The evil spirits of greed and pride, of envy and hatred, are executing their demonic dance in the hearts of man. People are not able to appreciate the value of the air they breathe, of the Sun's rays that illumine the world, the drops of rain that sustain life, and the subtle power that underlies every object in Nature. They have become low-minded people, dedicating their lives to meaningless pursuits. What needs to be done today is to foster people who are determined to stand and even suffer to realise the holy goals of peace and prosperity for the entire world. (Divine Discourse, Jan 22, 1982.)
தனி மனிதர்கள் இணைந்து ஒன்று சேர்க்கப் பட்ட சமுதாயத்தில் அவர்களிடையேயான ஒத்துழைப்பு, பாதுகாப்பையும், ஸ்திரத் தன்மையையும் உறுதி செய்கிறது. இது ''ஸ்ரீ ராம ரக்ஷை'', தெய்வீக அருளின் ஒரு அறிகுறி எனப் படுகிறது.பிற ஜீவ ராசிகளுடன் உள்ள பந்தத்தை ஏற்றுக் கொள்வதே, ஒருவரது தெய்வீக இயல்பைப் பற்றிய விழிப்புணர்வின் நிச்சயமான அறிகுறியாகும். இந்த பந்தம் தற்போது துண்டிக்கப் பட்டு விட்டது; அதன் காரணமாகவே வாழ்க்கை அர்த்தமற்றதாகி விட்டது. பேராசை மற்றும் கர்வம், பொறாமை மற்றும் த்வேஷம் ஆகியவற்றின் தீய சக்திகள், மனித இதயங்களில் அசுர தாண்டவம் ஆடிக் கொண்டு இருக்கின்றன.மனிதர்கள் தாங்கள் சுவாசிக்கும் காற்று,உலகை ஒளி பெறச் செய்யும் சூரியனின் கிரணங்கள், வாழ்வைப் பேணும் மழைத் துளிகள், மற்றும் இயற்கையில் உள்ள ஒவ்வொன்றின் ஆதாரமாக இருக்கும் சூக்ஷ்மமான அந்த சக்தி ஆகியவற்றின் மதிப்பைப் பாராட்ட இயலாதவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் கீழ்த்தரமான எண்ணம் கொண்ட மனிதர்களாக, தங்களது வாழ்க்கைகளை, அர்த்தமற்றவைகளின் பின்னால் அலைவதற்கு, அர்ப்பணித்து விட்டவர்களாக இருக்கிறார்கள். புனிதக் குறிக்கோள்களான உலகனைத்திற்கான சாந்தி , சந்தோஷங்களைப் பெறுவதில் உறுதியாக நின்று, அதற்காக கஷ்டங்களை எதிர் கொள்ளவும் சித்தமாக உள்ளவர்களைப் பேணிக் காப்பதே இன்று நாம் செய்ய வேண்டிய ஒன்றாகும்.