azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 25 Jun 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 25 Jun 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

Understand the Nature of the Divine Soul (Atma), which gives sustenance to all the senses. The five senses originate from Ether, which emerges from theAtma. Hence, if you understand theAtma, it is highly likely that your senses will be under your control. Then you will always be happy. Know that happiness is beyond comfort and sorrow. Comfort and sorrow are just the manifestations of the human mind. The state which is beyond this pleasure and grief is truly happiness. You can realize this state when you listen to the voice within you. God is present within you and He truly speaks to you from within. To experience that inner voice, you must silence your mind. You must control the activity of the external senses. When the inner and outer organs are completely controlled, you will clearly hear the Lord, speaking to you, from within. (My Dear Students, Vol 3, Ch 7, Jul 9, 1989)
அனைத்து புலன்களுக்கும் உயிரூட்டும் ஆத்மாவின் இயல்பைப் புரிந்து கொள்ளுங்கள்.ஆத்மாவிலிருந்து வெளிப்பட்ட ஆகாயத்திலிருந்து ஐம்புலன்களும் தோன்றின.ஏனவே, நீங்கள் ஆத்மாவைப் புரிந்து கொண்டு விட்டால், உங்களது புலன்கள் உங்களது கட்டுப் பாட்டுக்குள் வந்து விடுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம்.பின்னர் நீங்கள் எப்போதும் சந்தோஷமாக இருப்பீர்கள். சந்தோஷம் என்பது சௌகரியங்களுக்கும், துக்கத்திற்கும் அப்பாற்பட்டது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். சௌகரியம் மற்றும் துக்கம் என்பவை மனித மனப் ப்ரமைகளே. இந்த சுக துக்கங்களுக்கு அப்பாற்பட்ட நிலையே உண்மையான சந்தோஷம்.உங்களுள் இருந்து தோன்றும் ஆத்மாவின் குரலை நீங்கள் கேட்கும்போது,உங்களால் இந்த நிலையை எய்த முடியும். இறைவன் உங்களுள்ளேயே இருக்கிறான்; அவன் உண்மையில் உள்ளிருந்து உங்களுடன் பேசுகிறான்.அந்த அந்தராத்மாவின் குரலைக் கேட்க வேண்டும் என்றால் உங்கள் மனதை நிசப்தமாக்க வேண்டும். வெளிப்புலன்களின் செயலை, நீங்கள் கட்டுப் படுத்த வேண்டும். எப்போது உள் மற்றும் வெளி அங்கங்கள் முழுமையாகக் கட்டுப் படுத்தப் படுகின்றனவோ, உங்களுள் இருந்து இறைவன் உங்களுடன் பேசுவதை, நீங்கள் தெளிவாகக் கேட்பீர்கள்.