azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 23 Jun 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 23 Jun 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

Mind is present inside the body amidst the five sheaths(Pancha Koshas).The five sheaths are gross body sheath(Annamaya Kosha),Pranamaya Kosha(pertaining to the life force),Manomaya Kosha(mind sheath),Vijnanamaya Kosha(intellect sheath), andAnandamaya Kosha(Bliss sheath). Above the mind sheath isPrana(life force) and below it is discrimination power. Both of these are related to Fire. Mind is related to Water. The Moon is the presiding deity for the Mind. Hence coolness is its nature. Because of the presence of life force above and discrimination power below, the Mind melts and gets transformed into water. Water’s nature is to flow towards a lower level. It does not have the nature of flowing upwards. Hence the mind always wanders around the sensory and worldly pleasures. It cannot voyage towards the pure and higher stages. To divert the mind towards higher realms, spirituality is of utmost necessity. (My Dear Students, Vol 3, Ch 7, Jul 9, 1989. )
பஞ்ச கோசங்களுக்கு இடையில், இந்த உடலுள் மனம் உள்ளது . அன்னமய கோசம்,ப்ராணமய கோசம், மனோமய கோசம்,விஞ்ஞான மய கோசம் மற்றும் ஆனந்த மய கோசம் என்பவையே இந்த பஞ்ச கோசங்கள். மனதிற்கு மேல் இருப்பது ப்ராண மய கோசம், அதற்குக் கீழ் இருப்பது விஞ்ஞான மய கோசம். இந்த இரண்டுமே அக்னி சம்பந்தப் பட்டவை. மனம் நீருடன் சம்பந்தப் பட்டது. மனதிற்கு அதிபதி தேவதை சந்திரன்.எனவே, குளுமை அதன் இயல்பு. ப்ராணன் அதற்கு மேலும், விஞ்ஞானம் அதற்குக் கீழும் இருப்பதால் மனம் உருகி நீராக மாறுகிறது.நீரின் இயல்பு கீழ் நிலையை நோக்கிப் பாய்வதே. அதற்கு மேல் நோக்கிப் பாயும் தன்மை கிடையாது.எனவே, மனம் எப்போதும் புலன்கள் மற்றும் உலகியலான இன்பங்களையே சுற்றித் திரிகிறது. தூய மற்றும் புனிதமான உயர்ந்த நிலைகளை நோக்கிப் பயணிக்க, அதனால் முடிவதில்லை. மனதை உயர்ந்த நிலைகளை நோக்கித் திருப்புவதற்கு, ஆன்மீகம் மிகவும் அத்தியாவசியம்.