azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 22 Jun 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 22 Jun 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

Truth is not merely describing what you have seen, expressing as is what you have heard or sharing honestly what you have experienced. Truth is beyond all this. It is a deep inner feeling and it must come from within. Truth must originate from your heart. Truth is permanent; it does not change with the passage of time. When you rely on Truth (Satya), Righteousness (Dharma) arises out of it. It is Truth that teaches how one should conduct oneself and perform one’s duties. Righteousness is a reflection of Truth. You will experience peace whenSathyaandDharmaco-exist. This is indeed peace,Shanti. It is foolishness to think that Peace exists elsewhere and is separate from you. If you separate truth and righteousness, you will find only pieces, on the other hand if you blend them you will experience Peace always. (My Dear Students, Vol 2, Ch 13, Jun 7, 2007)
சத்யம் என்பது நீங்கள்,கண்ணால் கண்டவற்றை விவரிப்பதோ, காதால் கேட்டவற்றை அப்படியே தெரிவிப்பதோ, அனுபவித்ததை அப்படியே பகிர்ந்து கொள்வதோ மட்டும் அல்ல.சத்யம் என்பது இதற்கெல்லாம் அப்பாற்பட்டது. அது ஆழ்ந்த ,உள்ளார்ந்த உணர்வு மற்றும் அது அகத்திலிருந்து வர வேண்டும். அது உங்களது இதயத்திலிருந்து ஊற்றெடுக்க வேண்டும்.சத்யம் நிரந்தரமானது, காலத்தால் மாறுபடாதது.நீங்கள் சத்தியத்தைச் சார்ந்து இருந்தால், தர்மம் அதிலிருந்து தோன்றும்.சத்யமே ,ஒருவர் எவ்வாறு நடந்து கொண்டு, தனது கடமைகளை ஆற்ற வேண்டும் என்பதை போதிக்கிறது. தர்மம் சத்யத்தின் ஒரு பிரதிபலிப்பாகும்.சத்யமும் , தர்மமும் இசைந்து இருந்தால், நீங்கள் அமைதியை அனுபவிப்பீர்கள்.இதுவே உண்மையான சாந்தியாகும்.சாந்தி எங்கோ உங்களிடமிருந்து தனித்து இருக்கிறது என நினைப்பது மடமையே. நீங்கள் சத்யத்தையும், தர்மத்தையும் பிரித்து வைத்தீர்களானால், வெறும் துண்டுகளே (pieces) மிஞ்சும்;அதே சமயம் இரண்டையும் நீங்கள் ஒன்றரக் கலந்தால்,நீங்கள் எப்போதும் சாந்தியை (peace ) அனுபவிப்பீர்கள்.