azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 21 Jun 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 21 Jun 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

Lord Krishna said, “Don’t conduct yourself like a beast, not even like a human being. Know that you are the spark of the Divine. You are ancient, eternal and essentially Divine.Mamaivamsho Jeeva Loke Jeeva Bhoota Sanatanaha.” Being the sparks of Divine, you must have the sacred qualities of Truth, Righteousness, Peace, Love and Nonviolence. Instead of behaving in accordance with these noble virtues, people submit themselves to evil qualities like lust, greed, anger, jealousy, hatred and avarice which does not befit a human being. These changes are due to one’s food habits and behavior. The food you take and the water you drink must be pure, and timely. Lead a well regulated human life and realise the Divine within you. (My Dear Students, Vol 2, Ch 13, Jun 7, 2007)
பகவான் ஸ்ரீகிருஷ்ணர்,'' மிருகங்களைப் போல,ஏன் மனிதர்களைப் போலக் கூட நடந்து கொள்ளாதீர்கள். நீங்கள் தெய்வீகத்தின் ஒரு அம்ஸமே என்பதை அறிந்திருங்கள். நீங்கள் புராதனமானவர்கள், அமரர்கள் ,உண்மையில் தெய்வீகமானவர்கள் ( மைமைவாம்ஸோ ஜீவ லோகே ஜீவ பூத ஸனாதன:)'' என்றார். தெய்வீக அம்ஸங்களாக இருப்பதால்,புனித குணங்களான, ஸத்யம், தர்மம், சாந்தி, ப்ரேமை மற்றும் அஹிம்ஸை உடையவர்களாக நீங்கள் இருத்தல் வேண்டும். இப்படிப் பட்ட சீரிய குணங்களுக்கு ஏற்றவாறு நடந்து கொள்ளாமல், ஒரு மனிதனுக்கே ஏற்புடையதாக இல்லாமல் இருக்கும், காமம், க்ரோதம், லோபம், மோஹம், மதம் மற்றும் மாத்ஸர்யம் என்ற தீய குணங்களுக்கு, மனிதர்கள் அடி பணிந்து விடுகிறார்கள். ஒருவரது உணவுப் பழக்கங்கள் மற்றும் நடத்தையின் காரணமாகவே இந்த மாற்றங்கள் ஏற்படுகின்றன.நீங்கள் உட்கொள்ளும் உணவும், அருந்தும் நீரும் தூய்மையானதாகவும், சரியான காலத்திலும் இருக்க வேண்டும். நன்றாக முறைப் படுத்தப் பட்ட மனித வாழ்க்கையை நடத்தி உங்களுள் உள்ள தெய்வீகத்தை உணருங்கள்.