azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 12 Jun 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 12 Jun 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

God is beyond all qualities. He is blemishless, steady and selfless (Nirmalam, Nischalam and Niswartham). He is beyond time and space. Don’t try to confine God to just one form. Install the principle that God is the Divine Soul (Atma) present within you and contemplate on Him. In every step, everything you see, God is present. God is the current that makes fans work; God is the mike that absorbs the sound, and the speakers that help others listen. If you put off the main switch, all the lights will go out. When you forget Divinity, you forget everything. Love God deeply, from within. Love God and you will be able to conquer the demons of bad qualities and also develop the society. Only a person with character can bring development in society. Only the one with love for God can lead a life of morality. Morality is truly a life principle. Without morality there is no community. (My Dear Students, Vol 2, Ch 12, Jun 4, 2009.)
இறைவன் குணங்களுக்கு எல்லாம் அப்பாற் பட்டவன்.அவன் குறைகளற்றவன்( நிர்மலம் ), சலனமற்றவன் ( நிஸ்சலம்),தன்னலமற்றவன் ( நிஸ்வார்த்தம்). அவன் கால,தேச பரிமாணங்களுக்கு அப்பாற்பட்டவன். இறைவனை ஒரே ரூபத்திற்குள் கட்டி அடைத்து வைக்க முயலாதீர்கள். இறைவன் உங்களுள் உறையும் தெய்வீக ஆத்மா என்ற கோட்பாட்டை நிலை நிறுத்தி, அதை தியானியுங்கள்.ஒவ்வொரு படியிலும்,நீங்கள் காணும் ஒவ்வொன்றிலும் இறைவன் இருக்கிறான்.காற்றாடியை இயங்கச் செய்யும் மின்சாரம் இறைவனே;ஒலியை உள்வாங்கும் மைக்கும், அதை மற்றவர்கள் கேட்கும்படிச் செய்யும் ஒலிப்பானும் இறைவனே.நீங்கள் மெயின் ஸ்விட்சை அணைத்து விட்டால், எல்லா விளக்குகளும் அணைந்து விடும்.நீங்கள் எப்போது தெய்வீகத்தை மறந்து விடுகிறீர்களோ, அப்போதே நீங்கள் ஒவ்வொன்றையும் மறந்து விடுவீர்கள்.உள்ளார்ந்து இறைவனை ஆழமாக நேசியுங்கள். இறைவனை நேசித்தால் தீய குணங்கள் எனும் அரக்கனை வெல்வதோடு, சமுதாயத்தையும் மேம்படுத்த உங்களால் முடியும். நல்லொழுக்கமுடைய ஒரு மனிதனே சமுதாயத்தில் மேம்பாட்டை ஏற்படுத்த முடியும். இறைவன் பால் அன்பு கொண்ட ஒருவரால் மட்டுமே, நல்லொழுக்கமான வாழ்க்கையை நடத்த முடியும். நல்லொழுக்கமே உண்மையான வாழ்க்கைக் கோட்பாடு.நல்லொழுக்கம் இல்லை எனில் சமுதாயமே இல்லை.