azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 05 Jun 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 05 Jun 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

Never get dejected at any point in time for anything. It is said that there are two losses for the one who is dissatisfied -Asantushto Dvijo Nashtaha. One is they will not have any happiness and second, they will also not be at peace. Why do people feel dissatisfied? People get restless or disheartened, if someone is in a higher position or is wearing better clothes or is more educated than them. Don’t look at someone who is better than you. Compare yourself with someone who is in a lower position than you. Then, you will not develop negative qualities. When you compare yourself with someone better than you, ego and jealousy will certainly enter you. If you see the under privileged and the distressed, and have compassion for them and serve them, you will feel satisfied. Strengthen your empathy and develop noble qualities in this manner. (My Dear Students Vol 3, Ch 5, Jun 26, 1989)
ஒரு போதும் எதற்காகவும்,எந்த சமயத்திலும் மனச் சோர்வு அடையாதீர்கள். ''அஸந்துஷ்டோ த்விஜோ நஷ்ட :''திருப்தியே அடையாதவனுக்கு, இரட்டை நஷ்டம் என்பார்கள். ஒன்று அவர்களுக்கு எந்த சந்தோஷமும் இருக்காது, இரண்டாவது அவர்கள் சாந்தியுடனும் இருக்க மாட்டார்கள்.மனிதர்கள் ஏன் அதிருப்தி அடைகிறார்கள்? யாராவது தங்களை விட உயர்ந்த பதவியில் இருந்தாலோ,நல்ல உடைகளை அணிந்திருந்தாலோ,அல்லது தங்களை விட அதிகமாகப் படித்திருந்தாலோ, மனிதர்கள் நிம்மதியற்று அல்லது மனம் தளர்ந்து விடுகிறார்கள்.உங்களை விட சிறந்தவராக இருக்கும் ஒருவரைப் பார்க்காதீர்கள்.உங்களை விடத் தாழ்ந்த நிலையில் இருக்கும் ஒருவரோடு, உங்களை ஒப்பிட்டுப் பாருங்கள்.பின்னர், நீங்கள் எதிர்மறையான உணர்வுகளை வளர்த்துக் கொள்ள மாட்டீர்கள்.உங்களை விடச் சிறந்தவராக இருக்கும் ஒருவரோடு உங்களை ஒப்பிட்டுப் பார்த்தீர்களானால், அஹங்காரமும்,பொறாமையும் உங்களுள் கண்டிப்பாகப் புகுந்து விடும். நீங்கள் ஏழை . எளியவர்களைக் கண்டு அவர்களிடம் கனிவு கொண்டு அவர்களுக்கு சேவை செய்தீர்களானால்,நீங்கள் திருப்தி அடைவீர்கள். இவ்வாறு , பச்சாதாப உணர்வை வலுப்படுத்திக் கொண்டு,சீரிய குண நலன்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.