azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 04 Jun 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 04 Jun 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

It is not sufficient if you study well, receive degrees, get good jobs and earn high salaries. Today people worship wealth. They earn a lot of moneyand as they amass it, they waste it by spending it on constructing tall buildings, buying cars and for other such selfish purposes. Wealth acquired through unfair means is also being spent off in similar unfair activities. Money comes today and goes tomorrow, moves from person to person. Your ancestors also earned a lot of money. But they used it for judicious, righteous and noble pursuits. They built shelters for passersby, dug wells to provide water and established educational institutions and health centers. You must spend hard earned money in righteous ways. Else, that money will cause a lot of tribulations in your family. (My Dear Students, Vol 3, Ch 4, June 26, 1989)
நீங்கள் நன்றாகப் படித்து,பட்டங்கள் பெற்று, நல்ல வேலைகள் கிடைத்து, நன்றாகச் சம்பாதித்தால் மட்டும் போதாது.இன்று மக்கள் செல்வத்தை வழிபடுகின்றனர்.அவர்கள் நிறையப் பணம் சம்பாதித்து, அதைக் குவிக்கும் போது, உயர்ந்த கட்டிங்களைக் கட்டுவதிலும்,கார்களை வாங்குவது மற்றும் பல சுய நலமான நோக்கங்களுக்காக அதைச் செலவிடுவதன் மூலமும் வீணடிக்கிறார்கள்.தகாத முறையில் ஈட்டப் பட்ட செல்வமும் அவ்வாறே இப்படிப் பட்ட தகாத செயல்களுக்காகச் செலவிடப் படுகிறது.பணம் இன்று வருகிறது, நாளை போய் விடுகிறது, அது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குச் சென்று விடுகிறது. உங்களது மூதாதையர்களும் கூட நிறையப் பணம் சம்பாதித்தார்கள்.ஆனால் அவர்கள் அதை விவேகமான, தார்மீக மற்றும் உயர்ந்த காரியங்களுக்காகச் செலவிட்டார்கள்.அவர்கள் வழிப் போக்கர்களுக்காக சத்திரங்களைக் கட்டினார்கள், தண்ணீருக்கான கிணறுகளைத் தோண்டினார்கள், கல்வி நிலைங்களையும் , வைத்திய சாலைகளையும் அமைத்தார்கள்.நீங்கள் கஷ்டப்பட்டு ஈட்டிய பணத்தை தார்மீகமான வழிகளில் செலவிட வேண்டும்.இல்லை என்றால் அந்தப் பணம் உங்களது குடும்பத்தில் அதிகமான உபத்திரவங்களை உண்டாக்கும்.