azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 03 Jun 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 03 Jun 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

Prema(Love) should be shown not only towards God but towards all beings in creation. Love is a powerful force. No other power excels it. Misunderstanding the nature of love, people are falling a prey to suffering. This is the result of misguided expressions of what is considered love. People today worship God for the fulfillment of desires relating to this world and the other. This is not true love. People pretend to love their kith and kin and friends out of purely selfish considerations. This is only attachment and not love. Only that can be described as love which offers itself without any expectation of recompense. In the Gita, God has been describedSuhrith(a true friend). Without expecting any return, accompanying you like a shadow, God fulfills your desires. God has no expectations.Suhrithdefines the utterly selfless love of the Lord. (Divine Discourse, Apr 1, 1995.)
ப்ரேமையை இறைவன் பால் மட்டும் இன்றி சிருஷ்ட்டியில் உள்ள அனைத்து ஜீவராசிகளிடமும் காட்ட வேண்டும்.ப்ரேமை மிகவும் வலிமையான ஒரு சக்தியாகும்.எந்த சக்தியும் அதை மிஞ்சியதில்லை. ப்ரேமையின் இயல்பைத் தவறாகப் புரிந்து கொண்டு மனிதர்கள் துயரங்களுக்கு இறையாகிறார்கள். ப்ரேமை என்றால் இது தான் என்று இன்று கருதப்படுவது எல்லாம் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதன் விளைவே . மனிதர்கள் தங்களது இக, பர ஆசைகள் பூர்த்தி ஆவதற்காக இறைவனை வழிபடுகிறார்கள்.இது உண்மையான ப்ரேமை அல்ல. வெறும் சுயநலமான நோக்கங்களுக்காக மட்டுமே,மனிதர்கள் தங்களது உற்றார் ,உறவினர் மற்றும் நண்பர்களை நேசிப்பது போல பாவனை செய்கிறார்கள்.இது பற்றுதலே அன்றி ப்ரேமை அல்ல.எந்தப் பிரதிபலனையும் எதிர்பாராது தன்னை அர்ப்பணிப்பது மட்டுமே ப்ரேமை எனக் கருதத் தக்கது. ஸ்ரீமத் பகவத் கீதையில் இறைவன் ''ஸூஹ்ருத்'' - ஒரு உண்மையான நண்பன் என்று வர்ணிக்கப் படுகிறான்.எந்தப் பலனையும் எதிர்பாராது, உங்களை நிழல் போலத் தொடர்ந்து, இறைவன் உங்களது விருப்பங்களைப் பூர்த்தி செய்கிறான். ''ஸூஹ்ருத்'' என்ற சொல் இறைவனின் தன்னலமற்ற ப்ரேமையை வரையறுத்துக் காட்டுகிறது.