azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 31 May 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 31 May 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

You spend a lot of time on useless, momentary, temporary and worldly activities. Are you spending even a second of it for God? It is sufficient even if you concentrate for one second truly on the Lotus feet of Lord Krishna. If someone is given aShiva Lingam, they have difficulty in worshipping it withAbhishekam(holy prayerful bath). But they have time to clean their shoes or other objects with utmost care and interest. They struggle to find time to performAbhishekamwith a spoon of water. It is not that they don’t have time and the process is tedious. They lack interest. People are more interested in worldly activities. You lack interest in something that is pure. Only because of lack of purity, you are losing the power of discrimination. ‘Shraddhavan Labhate Jnanam’ – only out of deep interest can one acquire wisdom. Hence we must develop interest in spiritual subjects. (My Dear Students, Vol 3, Ch 4, Jun 26, 1989.)
நீங்கள் உபயோகமற்ற,கணநேரமே இருக்கும்,தாற்காலிகமான,உலகியலான செயல்களில் அதிகமான நேரத்தைச் செலவிடுகிறீர்கள்.அதில் ஒரு நொடியையாவது, இறைவனுக்காகச் செலவிடுகிறீர்களா?நீங்கள் ஒரு விநாடியாவது உண்மையாக பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் கமலப் பாதங்களை தியானித்தால் கூட, அதுவே போதுமானது.ஒருவருக்கு ஒரு சிவலிங்கம் அளிக்கப் பட்டால், அவர்களுக்கு அதற்கு அபிஷேகம் செய்து வழிபடுவது சிரமமாக இருக்கிறது. ஆனால்,அவர்களுக்கு,தங்களது காலணிகளையோ அல்லது மற்றப் பொருட்களையோ மிகக் கவனம் மற்றும் ஆர்வத்துடன் துடைத்து வைப்பதற்கு நேரம் இருக்கிறது.ஒரு கரண்டி அளவு நீர் எடுத்து அபிஷேகம் செய்வதற்கு நேரம் கிடைக்க அவர்கள் சிரமப் படுகிறார்கள்.அவர்களிடம் நேரம் இல்லை என்பதோ அல்லது அதைச் செய்வது மிகவும் கடினமானது என்பதோ அல்ல.அவர்களுக்கு ஆர்வம் இல்லை. மனிதர்கள் உலகியலான செயல்களில் அதிக ஆர்வம் கொண்டுள்ளார்கள்.மிகவும் தூய்மையான ஒன்றில் உங்களுக்கு ஆர்வம் இருப்பது இல்லை. தூய்மையின்மையின் காரணமாகத்தான் நீங்கள் பகுத்தறியும் திறனை இழந்து விட்டீர்கள். '' ஸ்ரத்தாவான் லபதே ஞானம்'' ஆழ்ந்த பக்தி சிரத்தை இருப்பவர் தான் ஞானத்தைப் பெறுவார்.எனவே, நாம் ஆன்மீக விஷயங்களில் ஆழ்ந்த ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.