azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 29 May 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 29 May 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

Dharmaraja always had Bheema to his left and Arjuna to his right. What is the significance? Bheema is remembered as a person of physical strength. Arjuna is known for his purity and valour. Do not take it that Dharmaraja was merely surrounded by people with physical strength and valour. Dharmaraja was always upright in practicing right conduct and moral principles. Hence, Bhima too always obeyed him and never misused his physical strength anywhere. Arjuna personified purity and possessed various powers and capabilities. He also won the friendship of Lord Krishna and various honours from Indra and others. Unlike the present day honours awarded by various Governments, Arjuna wore purity and valour as his decorations. Because purity and valour were on either sides, righteousness prevailed during the rule of Dharmaraja or Yudishtra. (Divine Discourse, Jun 26, 1989.)
தர்மராஜாவான யுதிஷ்டிரர் எப்போதும் பீமனை தனது இடது புறத்திலும், அர்ஜூனனை தனது வலது புறத்திலும் கொண்டிருந்தார். இதன் பொருள் என்ன?பீமன் தனது உடல் வலிமைக்கும், அர்ஜூனன் தனது வீரம் மற்றும் தூய்மைக்கும் பெயர் போனவர்கள்.தர்மராஜர் தன்னைச் சுற்றிலும் வீரம் மற்றும் உடல் வலிமை கொண்டவர்களை மட்டும் தான் கொண்டிருந்தார் என்று எடுத்துக் கொள்ளாதீர்கள்.தர்மராஜர் எப்போதும் தர்மத்தையும்,ஒழுக்க நெறிகளையும் கடைப்பிடிப்பதில் நேர்மையாக இருந்தார். எனவே, பீமனும் கூட எப்போதும் அவருக்குப் பணிந்து நடந்து கொண்டான்; அவன் ஒரு போதும் தனது உடல் வலிமையை எங்கும் தவறாகப் பயன்படுத்தியது இல்லை.அர்ஜூனன் தூய்மையின் உருவாகத் திகழ்ந்து, பல ஆற்றல்களையும், செயல் திறன்களையும் கொண்டிருந்தான். அவன் பகவான் ஸ்ரீகிருஷ்ணரது நட்பைப் பெற்றிருந்ததோடு, இந்திரன் மற்றும் பலரிடமிருந்து பல விருதுகளையும் வென்றிருந்தான்.பல அரசாங்கங்கள் அளிக்கும் இன்றைய விருதுகளைப் போல் அல்லாது, அர்ஜூனன் தூய்மை மற்றும் வீரத்தைத் தனது அலங்காரங்களாக அணிந்திருந்தான்.தூய்மையும், வீரமும் இருபக்கமும் இருந்ததால், தர்மம், யுதிஷ்டிரர் அல்லது தர்மராஜரின் ஆட்சியில் மேலோங்கி இருந்தது.