azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 21 May 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 21 May 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

All human activities must be undertaken with the sole aim of pleasing God. To attain such exalted heights, you must acquire true spiritual knowledge. Spiritual wisdom aids in subduing the senses. Ravana learnt 64 disciplines of educationand was an expert in many fields. However he has been labeled foolish and ignorant. Why? He was a slave to the senses. Rama, though learnt only 32 disciplines, subdued His senses and hence is exalted even today. Learning from this, all educated people must realize that a truly knowledgeable person is one who gained control over their senses. People who accomplished this significant inner victory are excellent examples portraying clearly the element of devotion. (Divine Discourse, My Dear Students, Vol 3, Ch 4, Jun 26, 1989)
அனைத்து மனிதச் செயல்களும் இறைவனை மகிழ்விக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளைக் கொண்டதாகவே இருக்க வேண்டும்.இப்படிப் பட்ட உயர்ந்த நிலையை அடைய, நீங்கள் ஆன்மீக ஞானத்தைப் பெற்றே ஆக வேண்டும். ஆன்மீக ஞானம் புலன்களை அடக்கி ஆள்வதில் உதவுகிறது. இராவணன் 64 விதமான கலைகளைக் கற்று, பல துறைகளில் மேதாவியாகத் திகழ்ந்தான். ஆனால் அவன் முட்டாள் மற்றும் அறிவிலி என அழைக்கப் படுகிறான். ஏன்?அவன் புலன்களின் ஒரு அடிமையாக இருந்தான்.ஸ்ரீராமர் 32 கலைகளையே கற்று இருந்தாலும்,தனது புலன்களை அடக்கி இருந்தார்; அதனால், அவர் இன்றும் போற்றப் படுகிறார்.இவற்றிலிருந்து, படித்தவர்கள், உண்மையான அறிவாளி என்பவர் தங்களது புலன்களை அடக்கி ஆள்பவரே, என்பதை உணர வேண்டும்.இப்படிப் பட்ட உள்ளார்ந்த வெற்றியைப் பெற்றவர்களே, பக்தியை தெளிவாக எடுத்துக் காட்டும் மிகச் சிறந்த உதாரண புருஷர்கள்.