azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 19 May 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 19 May 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

A young woman today aspires to be a good wife but not an exemplary mother. A student today does not aspire to be an exemplary father, but an attractive husband. Adding to this woe, parents today encourage such education which promotes these aspirations. Youngsters also forget their responsibilities to be discharged as exemplary parents. A typical father in today’s society does not want his son, above all, to be a man of virtue. He wants him to be a man of great education. Those parents alone, who aspire for transforming their children to be men and women of virtue, are worthy. Worldly education alone should not be the goal of life. Virtues are the true backbone of life. Education must be for life, not merely for a living. To accomplish this, spiritual thoughts and spiritual path is highly essential. (Divine Discourse, My Dear Students, Vol 3, Ch 4, Jun 26, 1989.)
ஒரு இளம் பெண்,இந்நாளில், நல்ல மனைவியாக இருக்க விழைகிறாளே தவிர, தலைசிறந்த அன்னையாக அல்ல.ஒரு மாணவன் இன்று தலை சிறந்த தந்தையாக இருக்க விழைவதில்லை;ஆனால் கவர்ச்சியான கணவனாக இருக்க விழைகிறான். இந்தக் கேடு போதாது என்று, பெற்றோர்களும், இப்படிப் பட்ட விருப்பங்களை வளர்க்கும் கல்வியை ஊக்குவிக்கிறார்கள்.தலை சிறந்த பெற்றோர்களாக தங்கள் கடமைகளை ஆற்றுவதை இளைஞர்களும் மறந்து விடுகிறார்கள். இன்றைய சமூகத்தில், பொதுவாக ஒரு தந்தை,தனது மகன் எல்லாவற்றிற்கும் மேலாக, நல்லொழுக்கங்கள் கொண்ட ஒரு மனிதனாக இருக்க வேண்டும் என விரும்புவதில்லை.அவர் தனது மகன் மெத்தப் படித்தவனாக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறார்.தங்களது பிள்ளைகள் நல்லொழுக்கமுடைய ஆண்கள் மற்றும் பெண்களாக மாற வேண்டும் என விழையும் பெற்றோரே மதிக்கத் தக்கவர்கள்.உலகியலான கல்வி மட்டுமே வாழ்க்கையின் குறிக்கோளாக இருக்கக் கூடாது. நல்லொழுக்கங்களே வாழ்வின் உண்மையான முதுகெலும்பு.கல்வி வாழ்விற்காக இருக்க வேண்டுமே அன்றி, வெறும் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்காக மட்டும் இருத்தல் கூடாது.இதை அடைவதற்கு ஆன்மீக எண்ணங்களும்,ஆன்மீகப் பாதையும் அத்தியாவசியம் ஆனவை.