azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 14 May 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 14 May 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

Buddha experienced the unity of all creation. There was total transformation in Him once He attained the vision of ekatma(oneness of the atma). He realised that all worldlyrelations were false. He transcended body consciousness. That is why he earned the appellation Buddha(the enlightened one). Man should use his buddhi(intellect) to understand this principle of unity.Buddhiis of two types: thebuddhithat sees diversity in unity is worldly intelligence. You should develop adhyatmic buddhi (spiritual intelligence) in order to realise the underlying unity of all creation. It gives you the experience of the atmic principle which is the same in the entire creation. Buddha attained the vision of the atma. Truly speaking, Buddha is not just one individual. All of you are Buddhas. You will see unity everywhere once you understand this truth. (Divine Discourse, May 13, 2006. )
புத்த பகவான் அனைத்து சிருஷ்டியின் ஐக்கியத்தை அனுபவித்தார். ஏகாத்ம பாவத்தின் காட்சியை அவர் அடைந்தவுடனேயே, அவருள் முழுமையான மாற்றம் ஏற்பட்டது. அனைத்து உலகியலான சம்பந்தங்களும் பொய்மையானவை என அவர் உணர்ந்தார். அவர் உடல் உணர்வுக்கு அப்பாற்பட்டவராக ஆனார். அதனால் தான் அவர்,'' புத்தர்'' (தன்னை உணர்ந்தவர்) என்ற பட்டத்தைப் பெற்றார்.மனிதன், இந்த ஐக்கியத்தின் கோட்பாட்டைப் புரிந்து கொள்ள தனது புத்தியைப் பயன்படுத்த வேண்டும். புத்தி ,இரண்டு வகையானது: ஒற்றுமையில் வேற்றுமையைக் காணும் புத்தி, உலகியலான புத்திசாலித்தனமாகும். நீங்கள், அனைத்து சிருஷ்டியின் அடிப்படையில் உள்ள ஐக்கியத்தை உணர,ஆன்மீக புத்தியை வளர்த்துக் கொள்ள வேண்டும்.அனைத்து சிருஷ்டியிலும் ஒன்றாக உள்ள ஆத்ம தத்துவத்தின் அனுபவத்தை அது உங்களுக்கு அளிக்கிறது.பகவான் புத்தர் ஆத்ம சாக்ஷாத்காரத்தைப் பெற்றார்.உண்மையைச் சொல்லப் போனால், புத்தர் என்பது ஒரு தனி மனிதரல்ல.நீங்கள் அனைவரும் புத்தர்கள்தான்.இந்த உண்மையை நீங்கள் புரிந்து கொண்டு விட்டால், நீங்கள் எங்கும் ஐக்கியத்தையே காண்பீர்கள்.