azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 11 May 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 11 May 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

Say you are expecting a train, a public transport that is supposed to arrive at 5 o’ clock. It is delayed by a few hours and doesn’t turn up until 8 or 9 p.m. How would you feel then? You first start to complain that the schedules of the trains and buses have no discipline and they don’t turn up on time. Then you start abusing the driver, the department, the government, and talk about it for a couple of days. When you complain so much about a delayed train or a bus which has no life, do you expect the world not abuse you, a conscious individual, when you do not adhere to your discipline, code of conduct and duty? All of you must understand the value of discipline and adhere to it consistently, and pass the test of discipline. (- Divine Discourse, 'My Dear Students', Vol 3, Ch 4, Jun 21, 1989.)
பலரும் பயணம் செய்யும், 5 மணிக்கு வர வேண்டிய ஒரு ரயில் வண்டியை நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அது சில மணி நேரங்கள் தாமதமாகி, 8 அல்லது 9 மணி வரை வந்து சேரவில்லை.முதலில், இந்த ரயில்களும்,பஸ்களும் வரும் நேரங்களில் ஒரு ஒழுங்கே இல்லை, அவை குறித்த நேரத்தில் வருவதில்லை என்று குறை கூற ஆரம்பிப்பீர்கள்.பின்னர் வண்டி ஓட்டுனர்,அந்தத் துறை, அரசாங்கம் எல்லோரையும் வசை பாட ஆரம்பிப்பீர்கள்; இதைப் பற்றி இரண்டு நாட்கள் பேசுவீர்கள். தாமதமாகி விட்ட ஜடமான ஒரு ரயில் அல்லது பஸ்ஸைப் பற்றியே நீங்கள் இவ்வளவு வசை பாடும் போது. உணர்வுள்ள மனிதரான நீங்கள் உங்களது ஒழுங்கு, நடைமுறை விதிகள் மற்றும் கடமையைப் பின்பற்றாவிடில்,இந்த உலகம் உங்களை வசை பாடாமல் இருக்கும் என்றா எதிர்பார்க்கிறீர்கள்? நீங்கள் அனைவரும் ஒழுங்குக் கட்டுப்பாட்டின் மதிப்பை உணர்ந்து,அதை உறுதியாகக் கடைப் பிடித்து, கட்டுப்பாடு என்ற பரீட்சையில் தேர்ச்சி பெற வேண்டும்.