azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 10 May 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 10 May 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

Dedication means offering to the Divine. When you offer flowersto God along with your salutation, it symbolizes offering of the flower of your heart. The flower of the heart is usually subjected to infestation by two evil creatures; they are Ego (Ahamkar) and Jealousy (Asuya). Ego is hard to conquer and arises from seven factors – Wealth, Physical Prowess, Birth, Scholarship, Beauty,Power and Penance. As long asAhamkarais predominant, it is impossible to recognize the Divinity within. Ego is a great barrier between the individual and God, and must be totally demolished. All forms of pride (particularly that of wealth, scholarship and power) cause human failings and downfall, and hence must be given up totally. Only when egoistic pride is offered as a sacrifice at the altar of the Divine, you can discover your true divine nature. (Divine Discourse, 'My Dear Students', Vol 2, Ch 9, Feb 24, 2005.)
அர்ப்பணிப்பு அல்லது சிரத்தை என்பது அனைத்தையும் இறைவனுக்குப் படைப்பதாகும்.நீங்கள் உங்களது நமஸ்காரத்துடன் ஒரு மலரை இறைவனுக்குப் படைக்கும் போது அது உங்களது இதய கமலத்தை இறைவனுக்கு அர்ப்பணிப்பதைக் குறிக்கிறது.உங்கள் இதயம் எனும் கமலம் சாதாரணமாக இரண்டு விதமான தீய ஜந்துக்களால் பாதிக்கப் படக் கூடியது; அவையே அஹங்காரமும்,அசூயையும் ( பொறாமை ). அஹங்காரத்தை வெல்வது மிகவும் கடினமானது;அது ஏழு விதமான அம்சங்களால் மேல் எழுகிறது- செல்வம், உடல்வலிமை, பிறப்பு, பாண்டித்யம், அழகு, அதிகாரம் மற்றும் தவம். அஹங்காரம் மேலோங்கி நிற்கும் வரை,உள்ளுறையும் தெய்வீகத்தை உணருவது இயலாத காரியம். அஹங்காரம் தனி மனிதனுக்கும், இறைவனுக்கும் இடையே இருக்கும் மிகப் பெரிய தடை; அதை முழுவதுமாக இடித்தே ஆக வேண்டும். அனைத்து விதமான மமதையும் (அதிலும் குறிப்பாக செல்வம், பாண்டித்யம் மற்றும் அதிகாரம்) மனிதர்களின் தோல்விகளுக்கும், வீழ்ச்சிக்கும் காரணமாக உள்ளன; எனவே அவற்றை முழுவதுமாக விட்டொழிக்க வேண்டும். அஹங்காரமான மமதையை இறைவனது சன்னிதானத்தில் ஒரு பலியாகப் படைத்தால் மட்டுமே, நீங்கள் உங்களது உண்மையான தெய்வீக இயல்பை கண்டு கொள்ள முடியும்.