azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 09 May 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 09 May 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

The bookish knowledge that many feverishly acquire is relevant only for the day of the exam. As you enter your professions armed with this knowledge, you will soon discover that you only have superficial knowledge on any subject and your general knowledge is almost zero. Without general knowledge and practical wisdom, you cannot discriminate. World today needs practical knowledge. Water is formed from two parts of hydrogen and one part of oxygen. You can prove this in the laboratory. But when you sit for lunch, do you mix two parts of hydrogen and one part of oxygen to drink water? By sipping just a drop, you can even comment on the purity of the water and its taste. Thus discrimination and general knowledge is very essential to make sure your daily life and behavior does not have any lapses. You must experience the enjoyable life in the right way at the right time. (Divine Discourse, 'My Dear Students', Vol 3, Ch 4, Jun 21, 1989.)
நீங்கள் விழுந்து விழுந்து படித்த புத்தக அறிவு, பரீட்சை நாள் அன்றைக்கு மட்டுமே ஏற்றதாக இருக்கும்.இந்த அறிவைக் கையில் ஏந்திக் கொண்டு நீங்கள் உங்கள் தொழில்களில் இறங்கும் போது,எந்தத் துறையிலும் உங்களது அறிவு மேம்போக்கானது என்பதையும், உங்களது பொது அறிவு அநேகமாக பூஜ்யம் என்பதையும் வெகு விரைவில் கண்டு கொள்வீர்கள். பொது அறிவும், நடைமுறை ஞானமும் இன்றி, உங்களால் பகுத்தறிய முடியாது. உலகத்திற்கு இன்று நடைமுறை ஞானம் தேவை.தண்ணீர் இரண்டு பங்கு ஹைட்ரஜன் மற்றும் ஒரு பங்கு ஆக்ஸிஜனால் உருவாகிறது,இதை நீங்கள் சோதனைக் கூடத்தில் நிரூபிக்கலாம்.ஆனால் நீஙகள் மதிய உணவைச் சாப்பிட உட்காரும் போது,நீங்கள் இரண்டு பங்கு ஹைட்ரஜன் மற்றும் ஒரு பங்கு ஆக்ஸிஜனைக் கலந்தா தண்ணீரக் குடிக்கிறீர்கள்? ஒரு துளி நீரை ருசித்தவுடனேயே, உங்களால் அந்த நீரின் தூய்மை மற்றும் சுவையைப் பற்றிக் கூட கருத்து அளிக்க முடியும்.இவ்வாறு பகுத்தறிவும்,பொது அறிவும், உங்களது அன்றாட வாழ்க்கை மற்றும் நடத்தை, குறைகள் இன்றி இருப்பதை உறுதி செய்ய அத்தியாவசியமானவை. நீங்கள் சந்தோஷமான வாழ்க்கையை சரியான வழியில்,சரியான நேரத்தில் அனுபவிக்க வேண்டும்.