azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 04 May 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 04 May 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

God is love and He is pleased with the pure hearted who love Him 100
இறைவன் அன்பே வடிவானவன்:தன்னைத் தூய இதயத்துடன் நூற்றுக்கு நூறு நேசிப்பவரைக் கண்டு அவன் மகிழ்ச்சி அடைகிறான். இந்த உடலின் (தேஹத்தின்) உள் உறையும் பரமாத்மாவை ( தேஹி) உணர, எல்லா விதமான முயற்சிகளையும் மேற்கொள்ளுங்கள்.இறை அருளால் தான் நீங்கள் உயிருடன் இருக்கிறீர்கள் என்பதை மறவாதீர்கள். அதன் மீது பற்று கொள்ளாது,உங்களது உடலைப் பராமரிப்பதில் நீங்களும், உங்கள் பங்கை ஆற்ற வேண்டும்.எப்போதும் உள்ளுறையும் பரமாத்மாவைக் கருத்தில் கொண்டு, அவருடன் இணைப்பை ஏற்படுத்தியவாறே, உங்கள் கடமைகளை ஆற்றுங்கள்.ஒவ்வொரு நாளின் இறுதியிலும் அல்லது ஒவ்வொரு கூட்டத்தின் முடிவிலும், '' எல்லா உலகங்களிலும் இருக்கும் அனைத்து ஜீவராசிகளும் இன்புற்று இருக்கட்டும் '' ( ஸமஸ்த லோகாஸ் ஸூகினோ பவந்து) என்று பிரார்த்தியுங்கள்.தனி மனிதரின் சாந்தி, உங்களைச் சுற்றியுள்ளவர்களின் சாந்தியைச் சார்ந்து தான் இருக்கிறது என்பதை உணருங்கள்.எனவே, எப்போதும், இந்த ப்ரபஞ்சத்தில் இருக்கும் அனைவரின் சாந்தி , சந்தோஷங்களுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்.