azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 03 May 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 03 May 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

The wellbeing of countries and even the universe depends upon morality. Without morality, nations willbe ruined. There may be many people who use education and influence to earn money, but truly great people have upheld the highest morality in their lives. You must be prepared to sacrifice. Sacrifice does not mean relinquishing your possessions. It means working really hard to earn a good name in the society you live in and bringing a good name to where you were raised. Your good name will last longer, and it will be eternal and permanent only with sacrifice. Scriptures explain the supremacy of sacrifice declaring, ‘sacrifice alone leads one to immortality’(Tyagenaike Amrutathwa Manuashuhu). (Divine Discourse, 'My Dear Students', Vol 2, Ch 9, Feb 24, 2005)
தேசங்களின், ஏன் , இந்த ப்ரபஞ்சத்தின் நலன் நல்லொழுக்கத்தையே சார்ந்திருக்கிறது. நல்லொழுக்கம் இல்லை எனில் நாடுகள் நாசமாகி விடும். தங்களது கல்வி மற்றும் செல்வாக்கைப் பயன் படுத்தி ,செல்வம் ஈட்டுபவர்கள் பலர் இருக்கலாம், ஆனால் உண்மையிலேயே தலைசிறந்த மனிதர்களாக இருப்பவர்கள்,மிக உயர்ந்த நல்லொழுக்கத்தை தங்கள் வாழ்க்கையில் நிலை நாட்டி உள்ளார்கள்.நீங்கள் தியாகம் செய்யத் தயாராக இருக்க வேண்டும். தியாகம் என்றால் உங்களது உடைமைகளைக் கைவிட்டு விட வேண்டும் என்று பொருளல்ல. இதன் பொருள்,நீங்கள் வாழுகின்ற சமுதாயத்தில் நல்ல பெயர் எடுத்து,நீங்கள் வளர்க்கப் பட்ட இடத்திற்கு நல்ல பெயர் வாங்கித் தர கடுமையாக உழைக்க வேண்டும் என்பதாகும். உங்களது நற்பெயர் வெகு காலம் நீடிக்கும்; தியாகம் இருந்தால் மட்டுமே அது, என்றும் நிலைத்து நிற்கும். சாஸ்திரங்கள் தியாகத்தின் மேன்மையை,'' தியாகம் ஒன்றே ஒருவரை அமரத்துவத்திற்கு இட்டுச் செல்ல வல்லது ( த்யாகேனைகே அம்ருதத்துவ மானஸூ: ) '' எனப் பறைசாற்றி விளக்குகின்றன.