azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 02 May 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 02 May 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

To cultivate a piece of land, the farmer works really long and hard. First, he has to soften the entire piece of land. He must then plough it, sow the seeds and water it regularly. After that, the crop has to grow to a certain stage, and to aid that, he needs to use fertilizers and remove the weeds at regular intervals. Only after all this, will he be able to bring home the food grains. That is exactly what we have to do with our hearts too. The heart is like a piece of land to be cultivated, and we must cultivate it with utmost care and concern. It must be watered with the water of love. Using the plough of enquiry, you must plough it and sow the seed of the Name of God, and then guard it very vigilantly using the fence of caution and care. You must protect it with egolessness, then you will receive the fruit of love. (Divine Discourse, 'My Dear Students', Vol 2, Ch 9, Feb 24, 2005)
ஒரு நிலத்தை விளை நிலமாக ஆக்குவதற்காக,ஒரு குடியானவன் உண்மையில் நீண்ட காலம் கடுமையாக உழைக்கிறான். முதலில் அவன் அந்த நிலம் அனைத்தையும் பண்படுத்த வேண்டும். அவன் பின்னர், அதை உழுது, விதையிட்டு, முறையாக நீர் பாய்ச்ச வேண்டும்.அதன் பின்னர், அந்தப் பயிர் ஓரளவு வளர வேண்டும்;அதற்கு உதவ, அவன் உரங்களைப் பயன்படுத்தி அடிக்கடி களைகளை நீக்க வேண்டும். இதை எல்லாம் செய்த பிறகு மட்டுமே, அவன் வீட்டிற்கு தானியங்களைக் கொண்டு வர முடியும். இதைப் போலவே தான், நாமும் நமது இதயங்களைக் கையாள வேண்டும். இதயமும், விளை நிலம் போன்றதே; அதை நாம் மிகுந்த கவனம் மற்றும் கருத்துடன் பண் படுத்த வேண்டும். அதில் அன்பெனும் நீரைப் பாய்ச்ச வேண்டும். ஆய்வு என்ற கலப்பைப் பயன்படுத்தி,நீங்கள் அதை உழுது, இறை நாமம் என்ற விதையை இட்டு , பின்னர் அதைக் கண்ணும், கருத்துமாக வேலியிட்டுக் காத்திட வேண்டும். அஹங்காரமின்மையால் அதை நீங்கள் காத்து வந்தால், பின்னர் நீங்கள் ப்ரேமை எனும் பழத்தைப் பெறுவீர்கள்.