azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 30 Apr 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 30 Apr 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

People practice various forms of worship and rituals following theirfamily traditionand culture. However they do not transform even a bit in spite of months and years of spiritual practice. Frustrated, they change the Name they are chanting, because they are tired of waiting for results. At times, people change not just the Name they chant, but also their religion. Know clearly that you cannot attain God’s Grace by changing the Name you chant or the religion. You must transform yourself. The dog in the home always recognizes its Master, no matter whether he or she wears a jogging dress, office uniform or party attire. It has no doubt about its Master, despite the dress worn. So too, you cannot convince God by merely changing your external appearance. You have to acquire virtues and conduct yourself righteously. Only the one who transforms the mind pleases the Lord and attains Divinity. (DivineDiscourse, 'My Dear Students', Vol 3, Ch 4, Jun 21, 1989)
மக்கள் தங்களது குடும்ப சம்பிரதாயங்கள் மற்றும் கலாசாரத்தை ஒட்டி,பல விதமான ஆராதனைகள் மற்றும் சடங்குகளைப் பின்பற்றுகிறார்கள்.ஆனால், பல மாத மற்றும் வருடக் கணக்கில் ஆன்மீக சாதனை ஆற்றினாலும் அவர்கள் ஒரு இம்மி அளவும் மனமாற்றம் பெறுவதில்லை.மனமுடைந்து,தேவையான பலன்களுக்காகக் காத்திருக்கப் பொறுமை இன்றி,அவர்கள் ஜபிக்கும் இறை நாமத்தை மாற்றிக் கொள்கிறார்கள்.சில சமயங்களில்,சிலர் தாங்கள் ஜபிக்கும் இறை நாமத்தை மட்டும் அல்லாது,தங்களது மதத்தையே மாற்றிக் கொள்கிறார்கள்.நீங்கள் ஜபிக்கும் இறை நாமத்தையோ அல்லது பின்பற்றும் மதத்தையோ மாற்றிக் கொள்வதால், இறைவனது அருளைப் பெற முடியாது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்.நீங்கள் உங்களையே மாற்றிக் கொண்டாக வேண்டும். ஒரு வீட்டு நாய், தன் எஜமானர், உடற்பயிற்சி உடை, அலுவலகச் சீருடை அல்லது கேளிக்கை உடை என எதை அணிந்திருந்தாலும், அவன் அல்லது அவளை எப்போதும் அடையாளம் கண்டு கொண்டு விடும்.அணிந்து கொண்டு இருக்கும் ஆடை எதுவானாலும், அதற்குத் தனது எஜமானனைப் பற்றிய சந்தேகமே கிடையாது. அதைப் போலவே, உங்களது வெளித் தோற்றத்தை மாற்றிக் கொள்வதால் மட்டுமே, இறைவனை நீங்கள் நம்ப வைக்க முடியாது.நீங்கள் நல்லொழுக்க நெறிகளைப் பெற்று,தர்மத்தின் பாததையில் நடக்க வேண்டும். எவர் ஒருவர் மனமாற்றம் பெறுகிறாரோ, அவர் மட்டுமே இறைவனை மகிழவைத்து, தெய்வீகத்தை அடைகிறார்.