azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 29 Apr 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 29 Apr 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

In the present, people disregard moral values and have no gratitude to those who helped them in times of need. In fact many youth lead miserable lives; they have no consideration for their kith and kin and do not hesitate to inflict harm on them. Educated young men and women do not behave like cultured human beings. What is the value of an education which does not enable you to do your duty to your spouse and children? The first requisite to fix these evils is the elimination of the bad qualities within. You must return to the path of morality and right conduct, fear sin and love God. People appearing to be pious and god-loving without genuine good qualities, and exhibiting hypocritical behaviour is vitiating the atmosphere everywhere; its promoting disorder and confusion. Everyone should therefore embark upongetting rid of bad traits and implanting Divine qualities. With love as your path realize the Divine within. (Divine Discourse, Apr 2, 1984.)
தற்காலத்தில்,மக்கள் ஒழுக்க நெறிகளை உதாசீனப்படுத்துகிறார்கள்; தங்களுக்குத் தேவைப் பட்ட காலத்தில் உதவி செய்தவர்களிடம் நன்றி உணர்வு கூட இல்லாதவர்களாக இருக்கிறார்கள். உண்மையில் பல இளைஞர்கள் பரிதாபகரமான வாழ்க்கை நடத்துகிறார்கள்; தங்களது உற்றார், உறவினரிடம் பரிவே இல்லாததுடன்,அவர்களுக்குத் தீங்கு இழைக்கத் தயங்குவதே இல்லை.படித்த இளைஞர்களும்,மகளிரும் கலாசாரம் கொண்ட மனிதர்களைப் போல நடந்து கொள்வதில்லை. உங்களது மனைவி மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளைச் செய்வதற்கு ஏதுவாக இல்லாத கல்வியினால் என்ன பயன்? இந்தத் தீமைகளைக் களைவதற்கான முழு முதல் தேவை நம்முள் உள்ள கெட்ட குணங்களை நீக்குவதே.நீங்கள் ஒழுக்கம் மற்றும் தர்மத்தின் பாதைக்குத் திரும்பி, பாவத்திற்கு அஞ்சி, இறைவனை நேசிக்க வேண்டும். உண்மையான நல்ல குணங்கள் இன்றி, பக்தியும், இறைவன் பால் அன்பு கொண்டவர்கள் போலவும் தோற்றமளித்து, வெளி வேஷம் போடும் மனிதர்கள் எங்கும் சூழ்நிலையைக் கெடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்; அது ஒழுங்கின்மையையும், கலக்கத்தையும் வளர்த்துக் கொண்டு இருக்கிறது. எனவே, ஒவ்வொருவரும் தீய பண்புகளை விடுத்து, தெய்வீக குணங்களை நிலை நாட்டுவதில் இறங்க வேண்டும். அன்பே உங்கள் பாதையாகக் கொண்டு, உங்களுள் உள்ள தெய்வீகத்தை உணருங்கள்.