azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 28 Apr 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 28 Apr 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

It was to remind people in the villages to think of God that the ancients built temples which towered above all other buildings. The temple tower was the first thing the villagers saw when they woke up in the morning. The sight of the temple spire immediately aroused in them spontaneous feelings of adoration. It must be recognised that it was not a crazy feeling which inspired the ancients to build huge temples at great expense. These multi-storeyed temple towers were built so that they might constantly evoke sacred thoughts about God in the minds of the people. It has been said: "The body (deha) is like a temple for theDehi(indwelling eternal Spirit)." Just as a doctor reminds you ofillness, and a lawyer makes you think of litigation, in the same manner when you look at your body you must remember God. (Divine Discourse, Oct 18, 1991.)
கிராமங்களில் உள்ளவர்கள் இறைவனை நினைவு கூறுவதற்காக, பண்டைய காலத்தவர்கள், மற்றைய கட்டிடங்களையும் விட உயரமாக கோவில்களைக் கட்டினார்கள்.காலையில் எழுந்தவுடன், கிராமத்தவர்கள் பார்க்கும் முதல் பொருள் கோவிலின் கோபுரமாகவே இருக்கும். ஆலய கோபுரத்தின் காட்சி உடனேயே அவர்களுள், தானாகவே ஆராதனை உணர்வுகளைத் தட்டி எழுப்பும். நமது பண்டைய காலத்தவர்கள் மிகப் பெரிய ஆலயங்களை ஏராளமாகச் செலவு செய்து கட்டியது ஏதோ பைத்தியகாரத்தனமான உணர்வுகளால் உந்தப்பட்டு அல்ல என்பதை உணர வேண்டும். இந்த பல அடுக்கு கொண்ட ஆலய கோபுரங்கள், மக்களின் மனங்களில் ஸதா ஸர்வ காலமும் இறைவனைப் பற்றிய புனித எண்ணங்களை எழுப்புவதற்காகக் கட்டப் பட்டவை.'' இந்த உடல் (தேஹம்), உள்ளுறையும் தெய்வீக ஆத்மாவின் (தேஹி), ஆலயம் போன்றது'' என்பார்கள். எவ்வாறு ஒரு வைத்தியர் வியாதியையும், ஒரு வக்கீல் வழக்காடுவதையும் உங்களுக்கு நினைவு படுத்துகிறாரோ, அவ்வாறே, நீங்கள் உங்கள் உடலைப் பார்க்கும் போது, இறைவனை நினைவு கூற வேண்டும்.