azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 27 Apr 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 27 Apr 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

Fire emerges when one wooden stick isrubbed against another. Can two sticks placed next to each other produce the fire? No. Fire though latent in them, emerges only through the act of rubbing of the sticks. What do these sticks symbolize? The sticks represent the human body. The fire of wisdom (jnana) is present in subtle form within us since our birth and is inert.Spiritual effort (Sadhana) is the process of rubbing thesticks. Where is the butter present in the milk? Butter has always been present in the milk and could be obtained only after the milk had been converted to curd and the curd was churned. Once butter is obtained from the buttermilk, it remains as butter without becoming milk. Likewise, in the human body, a divine power pervades every part of the body, which, after the experience of aSakshatkar(vision of the Divine) will not be attached to the body. ( Divine Discourse, Oct 18, 1991.)
ஒரு மரக்குச்சியை, மற்றொரு குச்சியுடன் தேய்த்து உரைத்தால்,அக்னி வெளிப்படுகிறது.இரண்டு குச்சிகளை ஒன்றன் அருகில் மற்றொன்றை சேர்த்து வைத்தால், அக்னி ஏற்படுமா? இல்லை.அக்னி அவற்றில் பொதிந்து இருந்தாலும், குச்சிகளைத் தேய்க்கும் செயலின் மூலமாக மட்டுமே அது வெளிப்படுகிறது. இந்தக் குச்சிகள் எதைக் குறிக்கின்றன?இவை மனித உடலைக் குறிக்கின்றன.ஞானம் எனும் அக்னி நமது பிறவியிலிருந்தே சூக்ஷ்ம ரூபத்தில், ஜடமாக நம்முள் இருக்கிறது.ஆன்மீக சாதனை என்பது குச்சிகளை ஒன்றோடு ஒன்று தேய்ப்பதைப் போலாகும்.பாலில் வெண்ணெய் எங்கு இருக்கிறது?வெண்ணெய் எப்போதுமே பாலில் இருக்கத் தான் செய்கிறது; பாலைத் தயிராக்கி ,தயிரைக் கடைந்தால் மட்டுமே, அதனைப் பெற முடியும். ஒருமுறை பாலிருந்து வெண்ணெயைப் பெற்று விட்டால்,அது பாலாக மாறாமல் வெண்ணெயாகவே இருக்கிறது.அதைப் போலவே, மனித உடலில், ஒரு தெய்வீக சக்தி அனைத்து உறுப்புக்களிலும் பரவி உள்ளது; அது ஆத்ம சாக்ஷாத்காரத்தைப்( தெய்வீகக் காட்சியை) பெற்று விட்ட பிறகு, உடலுடன் பற்றுதல் கொண்டு இருப்பதில்லை.