azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 26 Apr 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 26 Apr 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

There can be no joy in a dry, barren heart. Divine Love alone can make a dry heart fit for the sprouting of the sapling of joy. Divine Love is free from self-interest.That love alone is sacred and divine which is based on complete obliviousness to one's self and is solely concerned with the yearning for God. Only when such a precious diamond of love is shining in your heart, you will have sacred and divine thoughts. In ancient days, sages lived in the forests amidst wild animals and performed penance. How were they able to live in peace amongst these animals? Because they were filled with divine love, they extended that love to the wild beasts also. They had no lethal weapons with them, only the weapon of love, which transformed even the nature of the wild animals. Therefore fill your hearts with love. (Divine Discourse, Oct 18, 1991)
வரண்டு,உலர்ந்து போன இதயத்தில் சந்தோஷம் இருக்க முடியாது. தெய்வீக அன்பு ஒன்று தான், உலர்ந்து போன இதயத்தை, சந்தோஷம் எனும் செடி துளிர் விட்டு வளருவதற்கு ஏற்றதாகச் செய்ய முடியும்.தெய்வீக அன்பு சுயநலமற்றது.முழுமையாக தன்னையே மறந்து, இறைவனுக்காக மட்டுமே ஏங்குவது என்பதன் அடிப்படையில் உள்ள, அந்த அன்பு ஒன்று தான் புனிதமானதும், தெய்வீகமானதும் ஆகும்.இப்படிப் பட்ட விலை மதிப்பற்ற அன்பு எனும் வைரம் உங்கள் இதயத்தில் ஜொலிக்கும் போது தான், உங்களிடம் புனிதமான மற்றும் தெய்வீகமான எண்ணங்கள் இருக்கும். பண்டைய காலத்தில் முனிவர்கள் காடுகளில் ,கொடிய விலங்குகளுக்கு இடையே வாழ்ந்து தவம் புரிந்தார்கள். இந்த மிருகங்களுக்கு மத்தியில் அவர்கள் எவ்வாறு சாந்தியுடன் வாழ முடிந்தது?அவர்கள் தெய்வீக அன்பில் தோய்ந்திருந்ததால்,அந்த அன்பை அந்தக் கொடிய விலங்குகளுக்கும் அவர்கள் அளித்தார்கள். அவர்களிடம் அபாயகரமான ஆயுதங்கள் இல்லை, அன்பெனும் ஆயுதம் ஒன்றே இருந்தது;அதுவே அந்த கொடிய விலங்குகளின் குணத்தையே மாற்றி விட்டது.எனவே உங்களது இதயங்களை அன்பால் நிரப்புங்கள்.