azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 23 Apr 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 23 Apr 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

Once a friend asked the famous sculptor from Italy, Michelangelo, "Why are you working so hard, chiselling this large piece of rock? Why don't you go home and take some rest?" Michelangelo replied: "I am trying to release the Divine that is in the rock. I wish to bring out of this lifeless stone the living Divinity that is embedded in it." If a sculptor could create from an inanimate stone a living Image of God, cannot human beings vibrant with life manifest the living Divinity that resides within them? What is the reason for this incapacity to ,realise the Divinity within? It is because we do not realise the soiled cover in which it is wrapped up. If our clothes get dirty, we change them because we are ashamed to appear in unclean garments. If our house is shabby, we try to clean it. But when our minds and hearts are polluted, we do not feel ashamed! To purify our hearts and minds, the first thing we have to do is to lead a righteous life. Our actions must be based on morality. (Divine Discourse, Apr 2, 1984 )
ஒரு முறை, ஒரு நண்பர், புகழ் வாய்ந்த சிற்பியான மைக்கேல் ஏன்ஜலோவை, '' ஏன் இந்தப் பெரிய பாறையை செதுக்குவதில் கடுமையாக உழைத்துக் கொண்டு இருக்கிறாய்? வீட்டிற்குப் போய், சிறிது ஓய்வு எடுத்துக் கொள்ளக் கூடாதா?'' என்று வினவினார். மைக்கேல் ஏன்ஜலோ,அதற்கு,'' இந்தப் பாறையினுள் இருக்கும் தெய்வீகத்தை வெளிக் கொணர நான் முயற்சித்துக் கொண்டு இருக்கிறேன்.இந்த உயிரற்ற கல்லில் இருந்து அதனுள் பொதிந்திருக்கும் உயிருள்ள தெய்வீகத்தை வெளிக் கொணர ஆசைப்படுகிறேன்.'' என்று பதிலளித்தாராம். ஒரு சிற்பியால், ஜடமான ஒரு கல்லில் இருந்து உயிரோட்டம் கொண்ட இறைவனின் திரு உருவத்தை உருவாக்க முடியும் போது,உயிர் துடிப்பு உள்ள மனிதர்கள் அவர்களுள் உறையும் தெய்வீகத்தை வெளிக் கொண்டு வர முடியாதா? உள்ளுறையும் தெய்வீகத்தை உணர முடியாமல் இப்படி இருப்பதற்கு என்ன காரணம்?அது ஏனென்றால்,அது சுற்றி வைக்கப் பட்டிருக்கும் அழுக்கு படிந்த உறையை நாம் உணராததால் தான். நமது உடைகள் அழுக்கானால்,அவற்றை மாற்றுகிறோம், ஏனென்றால், தூய்மையற்ற உடைகளில் காணப்படுவதை நாம் அவமானமாகக் கருதுகிறோம்.நமது வீடு அலங்கோலமாக இருந்தால்,அதை நாம் சுத்தம் செய்கிறோம்.ஆனால் நமது மனமும்,இதயமும் மாசு படிந்து இருந்தால் நாம் அதை அவமானமாகக் கருதுவதில்லை!நமது மனங்களையும்,இதயங்களையும் தூய்மைப் படுத்துவதற்கு நாம் முதலில் செய்ய வேண்டியது தார்மீகமான வாழ்க்கை நடத்துவதே.நமது செயல்கள் ஒழுக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இருக்க வேண்டும்.