azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 21 Apr 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 21 Apr 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

A man who had four wives happened to go to Mumbai on some work. From there, he wrote to all of them that he was prepared to bring home whatever each of them wanted. The first wife asked for some nice tonics for her health, as well as rugs and woollen clothing to be of service whenever she fell ill. The second wife wanted some sarees of the latest style, jewellery of the Mumbai type and such other sundry decorative stuff. The third asked him to select for her some religious books like the Jnaneshwari,abhangs, etc. available in Mumbai book-shops, as well as pictures of Pandharinath, Bhavani and Sai Baba. The fourth wife had no list at all; she simply wrote, "If you return soon and safe, that is enough for me." The others got big packets containing whatever they had asked for, but the last one got his love. God gives you whatever you pray for; so think well and discriminate clearly before you pray and ask. (Divine Discourse, May 16, 1964.)
நான்கு மனைவிகள் உள்ள ஒருவர், வேலை நிமித்தமாக மும்பை செல்ல நேர்ந்தது.அங்கிருந்து.அவர் ,அவர்களை அனைவருக்கும்,அவரவருக்கு என்ன வேண்டுமோ,அதை வாங்கி வருவதாகக் கடிதம் எழுதினார்.முதல் மனைவி தனது உடல் நலத்திற்காக சில ஔஷதங்களையும்,அவள் நோயுற்றால் பயன்படுத்தக் கூடிய சில கம்பளித் துணிகள் மற்றும் போர்வைகளையும் வாங்கி வருமாறு வேண்டினார்.இரண்டாவது மனைவி நில நவீன புடவைகள், மும்பை பாணி நகைகள் மற்றும் பலவிதமான அலங்காரப் பொருட்களை விரும்பினார்.மூன்றாவது மனைவி , மும்பை புத்தக நிலயங்களில் கிடைக்கும் ஞானேஸ்வரி,அபங்க் போன்ற சில ஆன்மீகப் புத்தங்களையும், பண்டரிநாத், பவானி, சாய்பாபா போன்றவர்களின் படங்களையும் தேர்ந்தெடுக்குமாறு கேட்டார். நான்காவது மனைவி எந்தப் பட்டியலையும் தரவில்லை; அவர், '' நீங்கள் பத்திரமாகத் திரும்பி வந்தாலே எனக்குப் போதும் '' என்று எழுதினார். மற்றவர்கள் தாங்கள் கேட்ட பொருட்களின் பெரிய பார்சல்களைப் பெற்றார்கள் ஆனால் கடைசி மனைவிக்குக் கணவரின் அன்பு கிட்டியது. இறைவன், நீங்கள் எதை எல்லாம் வேண்டுகிறீர்களோ அதை அளிக்கிறான்; எனவே, பிரார்த்திப்பதற்கு முன் நன்றாக சிந்தித்து, தெளிவாகப் பகுத்தாராய்ந்து பின் கேளுங்கள்.