azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 20 Apr 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 20 Apr 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

Oblivious to the presence of the Divine within, people embark on the quest for God. They behave like a person who goes to borrow milk from their neighbour, forgetting the wish-fulfilling cow (Kamadhenu) in their backyard.Avatarsare of two kinds: AmsavatarandPurnavatar. Every human being is anAmsavatar (partial incarnation of the Divine); in the Gita, Lord Krishna says, ‘a part of the Divine Soul has become the individual soul in the world of living beings (Mamaivaamso jeevaloke jeevabhutah-sanaatanah)’. Many partial incarnations get caught up inMaya(worldly illusion), develop egoism and possessiveness, and lead worldly lives.Purnaavatar(full incarnation of the Divine) may behave, according to the circumstances, as if they were subject toMaya, but they are free fromMayaat all times. They subdue and transcendMaya, and manifest their full Divinity to the world throughout their lives.(Divine Discourse, Aug 14, 1990.)
தங்களுக்கு உள்ளேயே உறையும் தெய்வீகத்தை அறியாது,மக்கள் இறைவனைத் தேடுவதில் இறங்குகிறார்கள்.தங்களது வீட்டுக் கொல்லையில் இருக்கும் ( அனைத்து விருப்பங்களையும் பூர்த்தி செய்ய வல்ல) காமதேனுவை மறந்து விட்டு,அண்டை வீட்டுக்காரரிடம் பாலைக் கடனாகப் பெறச் செல்லுபவரைப் போல அவர்கள் நடந்து கொள்கிறார்கள்.அவதாரங்கள் இரண்டு விதமானவை-அம்ஸாவதாரம் மற்றும் பூர்ணாவதாரம்.ஒவ்வொரு மனிதனும் ஒரு (தெய்வீகத்தின் சில அம்சங்களைக் கொண்ட) அம்ஸாவதாரமே. ஸ்ரீமத் பகவத் கீதையில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்,''பரமாத்மாவின் ஒரு பகுதியே இந்த உலகின் ஜீவராசிகளில் , தனிப்பட்ட ஜீவாத்மாவாக உருப் பெற்றுள்ளது.(மைமைவாம்ஸோ ஜீவலோகே ஜீவபூத-ஸனாதன:).பல அம்ஸாவதாரங்கள், மாயையில் கட்டுண்டு, அஹங்காரம் மற்றும் மமகாரத்தை ( நான்-எனது) வளர்த்துக் கொண்டு, உலகியலான வாழ்க்கையை நடத்துகின்றனர். பூர்ணாவதாரங்கள், சந்தர்ப்பங்களைப் பொறுத்து,மாயையினால் பாதிக்கப் பட்டவர்களைப் போல நடந்து கொண்டாலும்,அவர்கள் எல்லாக் காலங்களிலும் மாயை அற்றவர்களே. அவர்கள் மாயையை அடக்கி,அதற்கு அப்பாற்பட்டு, தங்களது முழுமையான தெய்வீகத்தை,தங்கள் வாழ்க்கை முழுவதும் உலகனைத்திற்கும் வெளிப்படுத்துகிறார்கள்.