azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 19 Apr 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 19 Apr 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

The first prerequisite for leading a spiritual life is Faith. Your faith must stand ridicule of the ignorant, caviling by the worldly, and laughter of the low-minded. When someone ridicules, ask yourself, ‘Are they ridiculing my body? Well, that’s fine, for, I need to escape this body attachment anyway. Are they ridiculing theAtma? That is impossible, for theAtmais beyond words or thoughts, unaffected by praise or blame.’ Second: Do not worry about ups and downs, loss or gain, or joy or grief. You yourself create the ups and downs, therefore you can straighten them as well. You crave for a thing and when you get it, you call it joy; when you don't, you call it grief. Cut off craving, and there will be no more swinging from joy to grief. Third: Rationalise and be convinced of the truth that All is Divine (Sarvam Brahmamayam). Fourth and final: Be always steady in spiritual practice until you reach the goal. (Divine Discourse, May 16, 1964
ஆன்மீக வாழ்க்கை நடத்துவதற்கு முதலில் தேவை நம்பிக்கை.உங்களது நம்பிக்கை அறிவிலிகளின் பரிகாசம்,உலகியலானவர்களின் ஏளனம் மற்றும் கீழ்த்தரமான மனம் கொண்டவர்களின் எகத்தாளமான சிரிப்பு ஆகியவற்றை எதிர்த்து நிற்க வேண்டும்.யாராவது உங்களைப் பரிகசிக்கும் போது, உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள்,'' அவர்கள் எனது உடலை பரிகாசம் செய்கிறார்களா?நல்லது,அப்படியே இருக்கட்டும்;ஏனெனில் நான் எப்படியும் இந்த உடல் பற்றிலிருந்து தப்பியே ஆக வேண்டும்.அவர்கள் ஆத்மாவைப் பரிகாசம் செய்கிறார்களா?அது முடியாத ஒன்று;ஏனென்றால் ஆத்மா வார்த்தைகள் அல்லது எண்ணங்களுக்கு அப்பாற்பட்டது,, புகழ்ச்சி அல்லது இகழ்ச்சியால் பாதிக்கப் படாத ஒன்று.'' இரண்டாவதாக,ஏற்றம்-இறக்கம்,லாபம்- நஷ்டம் அல்லது சந்தோஷம்-துக்கம் ஆகியவற்றைப் பற்றிக் கவலை கொள்ளாதீர்கள். நீங்கள் தான் உங்களது ஏற்ற இறக்கங்களை உருவாக்குகிறீர்கள்; எனவே நீங்கள் அவற்றை சரி செய்து கொள்ளவும் முடியும். நீங்கள் ஏதாவது ஒரு பொருளுக்காக ஏங்குகிறீர்கள்.அது கிடைத்து விட்டால்,அதை சந்தோஷம் என்கிறீர்கள்.அது கிடைக்காத போது,அதை துக்கம் என்கிறீர்கள். இந்த ஏங்குதலை விட்டு விடுங்கள்;அதன் பின் இந்த சந்தோஷம் மற்றும் துக்கத்தின் இடையிலான ஊசலாட்டம் இருக்காது. மூன்றாவதாக,பகுத்தாராய்ந்து,அனைத்தும் தெய்வீகமே (ப்ரம்ம மயம்) என்ற உண்மையை நம்பிக்கையுடன் ஏற்றுக் கொள்ளுங்கள். நான்காவதும் இறுதியுமாக, உங்களது குறிக்கோளை எட்டும் வரை, ஆன்மீக சாதனையில் உறுதியாக இருங்கள்.