azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 18 Apr 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 18 Apr 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

There are several, who, despite chanting the Lord’s name for several hours, days and months together, did not transform themselves even one bit. The demonic nature of Ravana, Bhasmasura and Kamsa did not diminish even a little, despite their chanting of the Lord’s name. What is the reason for this? All their sense organs function with the feeling: "I am the body (Aham Dehosmi)." Those who utter the name of the Lord while being immersed in body consciousness cannot realise the Divine, however long their penance may last. You are the embodiment of Divine Consciousness. Only when you are pure, you can experience that consciousness. Through attachment to worldly pleasures one gets bound to the physical and becomes oblivious to one’s essential Divinity. (Divine Discourse, 'My Dear Students', Vol 3, Ch 4, Jun 21, 1989.)
இறைவனது நாமஸ்ரணையை பல மணி நேரம்,பல நாட்கள், ஏன் பல மாதங்கள் தொடர்ந்து செய்த போதும், தங்களை இம்மி அளவு கூட மாற்றம் செய்து கொள்ளாதவர்கள் பலர் இருக்கின்றனர். இராவணன்,பஸ்மாஸூரன், கம்ஸன் ஆகியோரது அரக்க குணங்கள்,அவர்கள் இறை நாமஸ்மரணை செய்த போதும் கூட,சிறிதளவும் குறையவில்லை.இதன் காரணம் என்ன? அவர்களது புலனுறுப்புக்கள் அனைத்தும்,'' இந்த உடலே நான் ( அஹம் தேஹோஸ்மி)'' என்ற உணர்வுடன் இயங்கியன. உடல் உணர்வில் மூழ்கி, இறை நாமஸ்மரணை செய்பவர்கள், எத்தனை காலம் தவம் செய்தாலும்,இறைவனை உணர முடியாது. நீங்கள் அனைவரும் தெய்வீக ஆத்ம ஸ்வரூபங்களே.நீங்கள் தூய்மையுடன் இருந்தால் மட்டுமே,அந்த உணர்வை அனுபவிக்க முடியும். உலகியலான இன்பங்களின் பற்றுதலினால்,ஒருவர் உடலுடன் கட்டுண்டு, தனது அடிப்படையான தெய்வீகத்தை அறிய முடியாதவராக ஆகி விடுகிறார்.