azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 17 Apr 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 17 Apr 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

Educare guides a person to be humble, it grants a sense of discrimination endowed with wisdom. Why should anyone feel proud in being educated? Ultimately isn’t what he or she has attained a fraction of all learning? Never be egoistic of the knowledge you have acquired. Education is true, only when you direct it to render service to the society. Humility must be the crest jewel ornament of an educated person; it is truly the essence of education. It must reflect in our daily conduct and behavior, and should not be simply limited to occasional verbal expressions. People with humility, and obedience to parents and elders will achieve great success in their lives. Through your own words and actions, you must manifest the latent values by engaging yourselves in appropriate acts.(Divine Discourse, 'My Dear Students', Vol 2, Ch 9, Jan 16, 1988)
'' எஜூகேர்'' எனப்படும் விழுக்கல்வி ஒருவரை பணிவுடன் இருக்க வழி காட்டுவதுடன்,அவருக்கு ஞானத்துடன் கூடிய பகுத்தறிவு உணர்வை அளிக்கிறது. படித்திருக்கிறோம் என்பதினால் ஒருவர் ஏன் கர்வம் கொள்ள வேண்டும்?முடிவில் அவனோ அல்லது அவளோ கற்றுள்ளது, அனைத்து கல்வியின் ஒரு கை மண்ணளவு தானே அல்லவா? நீங்கள் பெற்றுள்ள அறிவைப் பற்றி ஒருபோதும் கர்வம் கொள்ளாதீர்கள்.கல்வி என்பது, எப்போது நீங்கள் அதை சமுதாயத்திற்குச் சேவை ஆற்றுவதற்காக செலுத்துகிறீர்களோ அப்போது மட்டும் தான் உண்மையானதாகிறது.பணிவே,படித்தவரின் மகுடமாக இருக்க வேண்டும்; அதுவே உண்மையில் கல்வியின் சாரமும் ஆகும். ஏதோ, சில குறிப்பிட்ட சமயங்களில் வெறும் வாய்ப் பேச்சாக நின்று விடாமல்,அதுவே, நம் தினசரி நடத்தை மற்றும் பழக்க வழக்கங்களில் பிரதிபலிக்க வேண்டும். பணிவு ,பெற்றோர்கள் மற்றும் பெரியவர்களுக்குக் கீழ்ப்படிதல் ஆகிய குணங்கள் கொண்ட மனிதர்கள் அவர்களது வாழ்க்கையில் மிகச் சிறந்த வெற்றிகளைப் பெறுவார்கள்.உங்களது வார்த்தைகள் மற்றும் செயல்களின் மூலம்,உங்களுள் பொதிந்துள்ள மனிதப் பண்புகளை,தகுந்த பணிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வதன் மூலம் வெளிப்படுத்த வேண்டும்.