azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 16 Apr 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 16 Apr 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

We either think of the past or the future and ruin the present. Past is past, forget it. The past which is dead and gone, is useless. Work for your progress by living in the present, and in the moment. Future does not always bring happiness. And so far as the past is concerned, how much happiness have you experienced in it? Therefore, live happily in the present. What should we do in the present? Follow this maxim: Less luggage more comfort makes travel a pleasure. We should not worry about the past at all. Thinking about the past will not do any good to us. Therefore we should lead our life in the present and achieve all-round progress.(Divine Discourse, 'My Dear Students', Vol 2, Ch 14, Aug 22, 2007.)
நாம் கடந்த அல்லது எதிர்காலத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு, நிகழ்காலத்தை பாழடித்துக் கொள்கிறோம்.கடந்த காலம் கடந்து விட்டது அதை மறந்து விடுங்கள். மறைந்து,சென்று விட்ட, கடந்த காலம் பயனற்றது. நிகழ் காலத்தில், இப்போதைய தருணத்தில் வாழ்வதன் மூலம் உங்களது முன்னேற்றத்திற்காகப் பாடுபடுங்கள்.எதிர்காலம் எப்போதும் சந்தோஷத்தை மட்டுமே கொண்டு வராது.கடந்த காலத்தைப் பொறுத்தவரை,அதில் எந்த அளவு சந்தோஷத்தை நீங்கள் அனுபவித்து இருக்கிறீர்கள்? எனவே, நிகழ்காலத்தில் சந்தோஷமாக வாழுங்கள். நாம் நிகழ்காலத்தில் என்ன செய்ய வேண்டும்?இந்த அறிவுரையை பின்பற்றுங்கள்;குறைந்த சுமை,அதிக சுகம் பயணத்தை இனிதாக்குகிறது, நாம் கடந்த காலத்தைப் பற்றிக் கவலைப் படவே கூடாது.கடந்த காலத்தை நினைத்துக் கொண்டே இருப்பதால் எந்தப் பயனும் நமக்கு இல்லை. எனவே, நாம் நிகழ்காலத்தில் வாழ்ந்து,அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் காண வேண்டும்.