azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 14 Apr 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 14 Apr 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

Each and every one of you is a spark of the Divine. Lord Krishna declares in Bhagavad Gita, “You are all essentially Divine, you are eternal and ancient. Do not conduct yourself as a human being nor be beastial in your attitude and behavior”. Each one of you is endowed with the sacred qualities of Truth, Righteousness, Love, Peace and Non-Violence. Hence, all of you must conduct yourself in accordance with these noble virtues. Never submit yourself to the evil qualities such as lust, greed, anger, jealousy, hatred and avarice. These do not befit the life of any human being. At times, changes in place or food habits give rise to other behavioural tendencies. Hence, be aware and take pure food and pure water regularly and in a timely manner. Lead a happy life, as a true human being, by observing all the rules and regulations.(Divine Discourse, 'My Dear Students', Vol 2, Ch 13, June 7, 2007.)
நீங்கள் ஒவ்வொருவரும் தெய்வீக ஒளிக் கதிர்களே.பகவான் ஸ்ரீகிருஷ்ணர், ஸ்ரீமத் பகவத் கீதையில்,'' நீங்கள் அனைவரும் அடிப்படையில் தெய்வீகமானவர்கள்; நீங்கள் நிரந்தரமானவர்கள் மற்றும் புராதனமானவர்கள். ஒரு மனிதனைப் போலவோ அல்லது உங்களது இயல்பு மற்றும் நடத்தையில் மிருகங்களைப் போலவோ நடந்து கொள்ளாதீர்கள்'' என்று பறை சாற்றுகிறார். உங்கள் ஒவ்வொருவருள்ளும் புனிதமான குணநலன்களான சத்யம்,தர்மம், ப்ரேமை, சாந்தி, மற்றும் அஹிம்சை ஆகியவை இருக்கின்றன.எனவே,நீங்கள் அனைவரும் இந்த சீரிய குணநலன்களுக்குத் தக்கவாறு நடந்து கொள்ள வேண்டும். ஒருபோதும் உங்களை, தீய குணங்களான காமம்,க்ரோதம், லோபம், மோஹம், மதம், மற்றும் மாத்ஸர்யம் ஆகியவற்றிற்கு அடி பணிந்து விடச் செய்யாதீர்கள். இவை எந்த ஒரு மனித வாழ்க்கைக்கும் ஏற்றதல்ல.சில சமயங்களில், இட மற்றும் உணவு வகைகளது பழக்கங்களால், வேறு விதமான நடத்தை உணர்வுகள் எழக் கூடும்.எனவே,இதை உணர்ந்து தூய்மையான உணவு மற்றும் குடிநீரை முறையாகவும்,தகுந்த நேரங்களில் உட் கொள்ளுங்கள். அனைத்து விதி முறைகளையும் கடைப் பிடித்து,ஒரு உண்மையான மனிதனைப் போல,சந்தோஷமான வாழ்க்கை நடத்துங்கள்.