azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 12 Apr 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 12 Apr 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

Young students are innocent. Their hearts and minds are pure, and they are selfless. In the primary school, you will find that many of them observe perfect discipline and are well behaved. By the time they are in secondary school, the purity and discipline slowly decreases. When they reach a college or university, everything becomes topsy-turvy! What really happens in between? As they grow in years, their mental balance is upset; they lose the steadiness of mind and self-control. They are exposed to undesirable influences. At this stage, teachers and parents must practice exemplary behavior and ensure that the children are on the right path at all times. Students also must bear in mind that all the regulations and discipline that are prescribed are for their highest good and in their own interests. (Divine Discourse, 'My Dear Students', Vol 2, Ch 8, Jun 15, 1989)
மாணவக் குழந்தைகள் ஒன்றும் அறியாதவர்கள்.அவர்களது இதயங்களும் மனமும் தூய்மையானவை,அவர்கள் தன்னலமற்றவர்கள்.ஆரம்பப் பள்ளிகளில், நீங்கள் அவர்களில் பலர்,பரிபூரணமான கட்டுப்பாட்டைக் கடைப் பிடிப்பதையும், நல்ல முறையில் நடந்து கொள்வதையும் காணலாம். அவர்கள் மேல் வகுப்புகளுக்கு வரும் நேரத்தில்,தூய்மையும், கட்டுப்பாடும் மெதுவாகக் குறைந்து விடுகிறது. அவர்கள் கல்லூரி அல்லது பல்கலைக்கழக நிலைக்கு வரும்போது அனைத்தும் தலை கீழாக மாறி விடுகிறது!இதற்கு இடையில் உண்மையில் என்ன நடக்கிறது?அவர்கள் வளர வளர, மன சமநிலை தடுமாறி விடுகிறது; மனதின் நிலையான தன்மையையும், சுயக் கட்டுப்பாட்டையும் இழந்து விடுகிறார்கள். அவர்கள் விரும்பத்தகாத தாக்கங்களுக்கு உள்ளாகிறார்கள். இந்த நிலையில் தான் ஆசிரியர்களும், பெற்றோர்களும் தலை சிறந்த நடத்தையை தாங்கள் கடைப்பிடித்து, குழந்தைகள் எப்போதும் சரியான பாதையில் செல்வதை உறுதி செய்ய வேண்டும். மாணவர்களும், அனைத்து விதிகளும்,கட்டுப்பாடுகளும் அவர்களது தலை சிறந்த நன்மைக்கும், அவர்களது சொந்த நலன்களுக்காகவும் தான் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.