azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 11 Apr 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 11 Apr 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

People today depend on their intelligence, physical strength and money, but do not have as much confidence in their own Self. When you have Self-Confidence, you can achieve anything. You may have wealth or money (Dhana Bala), but how long will it last? It is like a passing cloud; it comes and goes. How long will this wealth called people (Jan Bala) - family and friends, last? As long as you have power, position and wealth, people will surround you. Hence all of these are transitory. You will receive true respect in this world, when you have the strength of the Soul. Therefore, lead your lives with the strength of the Divine to attain the Divine. With faith in God, you must resort to good activities. As is the action, so is the result. Every step you take, must lead you to His proximity. Make every effort to get close to God. Then, you will be triumphant in life.(Divine Discourse, 'My Dear Students', Vol 3, Ch 3, Jun 30, 1996.)
மனிதர்கள் இன்று தங்களது புத்தி,உடல் வலிமை மற்றும் பணத்தைச் சார்ந்து இருக்கிறார்கள்;ஆனால்,தங்கள் மீதே அவர்களுக்கு அவ்வளவு தன்னம்பிக்கை இருப்பது இல்லை.உங்ளுக்குத் தன்னம்பிக்கை இருந்தால், நீங்கள் எதையும் சாதிக்க முடியும்.உங்களிடம் தன பலம் இருக்கலாம், ஆனால் அது எவ்வளவு காலம் இருக்கும்?அது கலையும் மேகங்களைப் போன்றது;அது வரும் ,போகும். எவ்வளவு காலம் இந்த ஆள் பலம் ( ஜன பலம்) எனப்படும் உற்றார், உறவினர்கள் இருப்பார்கள்?உங்களிடம் அதிகாரம்,பதவி மற்றும் செல்வம் இருக்கும் வரை மனிதர்கள் உங்களைச் சுற்றி இருப்பார்கள். எனவே இவை அனைத்தும் நிலையற்றவை.எப்போது உங்களுக்கு ஆத்ம பலம் இருக்கிறதோ, அப்போது தான், உங்களுக்கு இந்த உலகில் உண்மையான மரியாதை கிடைக்கும். எனவே, உங்கள் வாழ்க்கையை தெய்வத்தின் சக்தியோடு , தெய்வத்தை அடைவதற்காக நடத்துங்கள்.தெய்வ நம்பிக்கையுடன், நீங்கள் நற்செயல்களில் ஈடுபட வேண்டும்.செயல் எப்படியோ, விளைவு அப்படியே. நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், உங்களை இறைவனது அருகாமைக்கு இட்டுச் செல்ல வேண்டும். இறைவனுக்கு அருகில் செல்ல ஒவ்வொரு முயற்சியையும் மேற் கொள்ளுங்கள்.பின்னர் நீங்கள் வாழ்வில் வெற்றி பெறுவீர்கள்.