azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 10 Apr 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 10 Apr 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

Rama chose to go to the forest to fulfill the pledge of His father. It may be asked: Did He go to the forest under anycompulsion or out of His own resolve, or with a sense of dissatisfaction? No. Rama set out for the forest with the same sense of serenity and joy with which He looked forward to His coronation. Rama demonstrated the spirit of equanimity. He showed that pain or pleasure, profit or loss, victory or defeat, were the same to Him. In human life,pleasure and pain, happiness and sorrow alternate all the time. It is not a good quality to welcome pleasure and turn away pain. You must welcome sorrow in the same joyous spirit in which you greet happiness. Happiness has no value unless there is also sorrow. That is why it is said, "Pleasure is not secured from pleasure." Pain is needed to secure pleasure. Rama demonstrated to the world the truth of this concept. (Divine Discourse, Apr 5, 1998.)
ஸ்ரீராமர்,தனது தந்தைக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற கானகம் சென்றார். அவர் கட்டாயத்தின் பேரிலோ அல்லது தனது ஸங்கல்பத்தின் காரணமாகவோ அல்லது அதிருப்தியான மனத்தோடோ, கானகம் சென்றாரா? இல்லை. தனது பட்டாபிஷேகத்தை எவ்வளவு சாந்தம் மற்றும் ஆனந்தத்தோடு அவர் எதிர்பார்த்தாரோ, அதற்கு சமமான மனப்பாங்குடனேயே கானகத்திற்கும் புறப்பட்டார்.ஸ்ரீராமர் சமநிலையான மனப்பாங்கை எடுத்துக் காட்டினார்.அவர், துன்பம்-இன்பம்,லாபம்-நஷ்டம்,வெற்றி-தோல்வி யாவும் தனக்கு ஒன்றே எனக் காட்டினார். மனித வாழ்க்கையில், இன்பமும், துன்பமும், சந்தோஷமும் , துயரமும் எப்போதும் மாறி மாறி வந்து கொண்டு தான் இருக்கும்.இன்பத்தை மட்டும் வரவேற்று,துன்பத்தைத் தவிர்க்க முயல்வது நல்ல குணமல்ல. சந்தோஷத்தை எவ்வளவு மலர்ந்த முகத்தோடு வரவேற்கிறீர்களோ, அதே போலவே துன்பத்தையும் நீங்கள் வரவேற்க வேண்டும்.துக்கமும் இல்லை எனில்,சந்தோஷத்திற்கு மதிப்பில்லை. அதனால் தான்,'' இன்பத்திலிருந்து இன்பம் கிடைப்பதில்லை'' எனக் கூறப் படுகிறது.இன்பத்தைப் பெற துன்பம் தேவை. ஸ்ரீராமர் இந்த சித்தாந்தத்தின் உண்மையை உலகிற்கு எடுத்துக் காட்டினார்.