azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 09 Apr 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 09 Apr 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

The Vedas taught two kinds ofdharma(codes of right conduct). One is termedpravrithi(outward path) and the other is termednivrithi(inward path). Pravrithi is related to worldly activities; it prescribes the qualities needed for leading the life in the mundane world.Nivrithiteaches knowledge of the Self (Atma-jnana). One who knows the difference between the two is dauntless. For example, when one is hungry,Pravrithitells one to eat food and appease the hunger. Nivrithi reminds what kind of food one should eat, what is good for one’s health and what is injurious, and how it should be consumed. All conflicts begin from your mind; it is Pravrithi that generates conflict, brings about union and separation. Ayodhya (a-yodhya) means a place free from strife and controversy; no enemy could enter it. The human heart is the symbol of Ayodhya.( Divine Discourse, Apr 5, 1998).
வேதங்கள் இரண்டு விதமான தர்மத்தைப் போதிக்கின்றன.ஒன்று 'ப்ரவ்ருத்தி ' (வெளி உலக நோக்கு), மற்றது ' நிவ்ருத்தி ' ( உள்ளார்ந்த நோக்கு). 'ப்ரவ்ருத்தி ' வெளி உலக செயல்களுடன் சம்பந்தப் பட்டது; இந்த உலகில் வாழ்வதற்குத் தேவையான குணங்களை விளக்குகிறது. ' நிவ்ருத்தி ' ஆத்ம ஞானத்தை விளக்குகிறது.இந்த இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை அறிந்தவனே அஞ்சா நெஞ்சன்.உதாரணத்திற்கு, ஒருவருக்குப் பசிக்கும் போது, ' ப்ரவ்ருத்தி ' உணவை உண்டு பசியைத் தீர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறது. ' நிவ்ருத்தி 'எப்படிப் பட்ட உணவை உண்ண வேண்டும், எது உடல் நலத்திற்கு நல்லது, எது தீமையானது, அதை எவ்வாறு உண்ண வேண்டும் என்பதை எல்லாம் அறிவுறுத்துகிறது. அனைத்துப் போராட்டங்களும் உங்களது மனதில் தான் உருவாகின்றன; ' ப்ரவ்ருத்தியே ' போராட்டங்களை உருவாக்கி பந்தங்களையும், பிரிவினைகளையும் ஏற்படுத்துகிறது. அயோத்யா ( அ-யோத்யா ) என்றால், கலகமும்,சச்சரவும் அற்ற இடம் எனப் பொருள்; எந்தப் பகைவனும் அதில் உள் நுழைய முடியாது. மனித இதயமே அயோத்யாவின் சின்னம்.