azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 08 Apr 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 08 Apr 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

Rama’s name is a life-giving essence with esoteric significance. Itconsists of three syllables:Ra Aa Ma. The combination of the three letters constitute the name ‘Rama’.RarepresentingAgni(the Fire God), burns away all sins;AarepresentingSurya(the Sun God), dispels the darkness of ignorance; andMarepresentingChandra(the Moon God), cools one’s temper and produces tranquility. The name Rama has the triple power of washing away one's sins, removing one's ignorance, and tranquilizing one's mind. How can this profound meaning of the name Rama be imparted to mankind? This can be done only by the Divine coming in human form and demonstrating to mankind the power of the Divine. Rama was one who, while appearing to lead the life of an ordinary man, led the Life Divine. He demonstrated the ideal life of a spiritually realised person. (Divine Discourse, Apr 5, 1998.)
ஸ்ரீராம நாமம் உயிரூட்ட வல்ல சாரமும்,ஆழ்ந்த முக்கியத்துவம் பொதிந்த ஒன்றும் ஆகும்.அது மூன்று எழுத்துக்களைக் கொண்டது: ரா ஆ மா. இந்த மூன்று எழுத்துக்களின் இணைப்பே '' ஸ்ரீராம '' நாமம். ''ரா'' ,அனைத்து பாவங்களையும் சுட்டெரித்து விடும் அக்னி பகவானைக் குறிக்கிறது. ''ஆ'' அறியாமை எனும் இருளை நீக்கும் சூரிய பகவானைக் குறிக்கிறது; ''மா'', ஒருவரது உணர்ச்சிகளைக் குளிர வைத்து, அமைதியை நிலை நாட்டும் சந்திர பகவானைக் குறிக்கிறது. ஸ்ரீ ராம நாமம்,ஒருவரது பாவங்களைக் களைந்து, அறியாமையைப் போக்கி,மனதை அமைதிப்படுத்த வல்ல மூன்று விதமான சக்திகளைக் கொண்டது. ஸ்ரீராம நாமத்தின் இப்படிப் பட்ட மகத்தான உட்கருத்தை மனித குலத்திற்கு எவ்வாறு உணர்த்துவது? இதற்கு இறைவனே மனித உருவில் வந்து,தெய்வீகத்தின் மஹிமையை மனித குலத்திற்கு எடுத்துக் காட்டுவதால் மட்டுமே முடியும். ஸ்ரீராமர்,சாதாரண மனிதனாக வாழ்க்கை நடத்துவது போலத் தோன்றினாலும்,தெய்வீக வாழ்க்கையை நடத்தியவர். ஆன்மீகமாகத் தன்னை உணர்ந்த ஒருவரது இலட்சிய வாழ்க்கையை அவர் நடத்திக் காட்டினார்.