azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 07 Apr 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 07 Apr 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

The profound message the divine epic Ramayana gives is: One must lead the life of a human being, and one must seek oneness with the Divine. In every human being, all the three natures – human, divine, and demonic – are present. But most people today ignore their humanness and Divinity, and foster only their demonic nature. In fact, one should strive to manifest the Divinity, and not display one’s weakness or unpleasant qualities. In every act, Rama set the example, be it in individual conduct, in the discharge of duties to the family, or in fulfilling the obligations to society. Rama demonstrated the ideals to be followed. All should begin with fulfilling their individual obligations. The duty of the individual is to manifest the Divinity within. As an individual, Rama revealed the Divinity in Him through His ideal conduct. ( Divine Discourse, Apr 5, 1998.)
தெய்வீக இதிகாசமான ஸ்ரீமத் ராமாயணம் அளிக்கும் உபதேசம் இதுதான்: ஒருவர் மனிதனாக தனது வாழ்க்கையை நடத்தி,இறைவனுடன் ஒன்றரக் கலப்பதை நாட வேண்டும்.ஒவ்வொரு மனிதனிடமும் மூன்று குணாதிசியங்கள் உள்ளன- ஸத்வ, ரஜஸ் மற்றும் தமஸ்.ஆனால், பெரும்பாலானவர்கள் மனித மற்றும் தெய்வ குண நலன்களைப் புறக்கணித்து தங்களது அசுர குணங்களையே வளர்த்துக் கொள்கின்றனர். உண்மையில், ஒருவர் தனது செய்வீக குணங்களையே வெளிப்படுத்த முயல வேண்டும்; தங்களது பலஹீனங்கள் அல்லது வெறுக்கத் தக்க குணங்களை விளம்பரப் படுத்திக் கொள்ளக் கூடாது.ஒவ்வொரு செயலிலும்,அது தனித மனித நடவடிக்கை ஆகட்டும்,குடும்பத்தின் பொறுப்புகளை நிர்வகிப்பதாகட்டும் அல்லது ஒரு சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய கடமைகளைச் செய்வதாகட்டும், ஸ்ரீராமர் ஒரு எடுத்துக் காட்டாகத் திகழ்ந்தார்.ஒருவர் பின்பற்ற வேண்டிய லட்சியங்களை ஸ்ரீராமர் நிரூபித்துக் காட்டினார். அனைவரும், தங்களது தனிப்பட்ட கடமைகளைப் பூர்த்தி செய்வதிலிருந்து தொடங்க வேண்டும்.ஒரு தனி மனிதனாக ஸ்ரீராமர், தனது லட்சிய நடத்தையின் மூலம் தன்னுள் உள்ள தெய்வீகத்தை வெளிப்படுத்தினார்.