azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 05 Apr 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 05 Apr 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

You may go through sacred texts, offer all sorts of prayers to all Gods and perhaps be in a thick forest or in the safest place, but you cannot run away from your destiny. Just like you may immerse a container in a small lake or a large ocean, but you cannot collect more water than what the container can hold. Without the strength of righteousness, physical and intellectual strength are of no avail. Examine for yourself – what happened to the mighty Karna (in the epic Mahabharata)? Though he had the intellect and physical valour, he joined the bad company of Duryodhana, Dushasana and Shakuni, and therefore came to be known as the fourth wicked person. So never be in bad company who will lead you to entertain bad thoughts and indulge in inappropriate actions. To earn the special grace of God, you must be in good company and do good deeds. Then God will make your container bigger to harvest His Grace!('My Dear Students', Vol 3, Ch 3, Jun 30, 1996.)
நீங்கள் புனித நூல்களைப் படிக்கலாம்,அனைத்து தேவதைகளுக்கும் அனைத்து விதமான வழிபாடுகளைப் படைக்கலாம்;ஒருவேளை அடர்ந்த கானகத்திலோ அல்லது பாதுகாப்பான ஒரு இடத்திலோ இருக்கலாம் ஆனால், நீங்கள் உங்களது விதியிலிருந்து தப்ப முடியாது.ஒரு பாத்திரத்தை சிறிய ஏரியிலோ அல்லது அகண்ட சாகரத்திலோ நீங்கள் முக்கினாலும்,அது கொள்ளுமளவுக்கு மேல் உங்களால் தண்ணீரை எடுக்க முடியாததைப் போன்றது அது.தர்மத்தின் பலமின்றி, உடல் மற்றும் புத்தி பலம் பயனற்றதே. உங்களையே சுய ஆய்வு செய்து கொள்ளுங்கள்- மஹாபாரத இதிகாசத்தில் மஹாவீரனான கர்ணனுக்கு என்ன நிகழ்ந்தது?அவனுக்கு புத்தி கூர்மையும் உடல் வலிமையும் இருந்த போதும் அவன் துரியோதனன்,துச்சாதனன் மற்றும் சகுனியின் நட்பு வட்டத்தில் சேர்ந்ததால், நான்காவது தீய மனிதனாகக் கருதப் பட்டான். எனவே, ஒரு போதும், தீய எண்ணங்களை உருவாக்கி,தகாத காரியங்களில் ஈடுபட வைக்கும் தீயவர்களின் நட்பு வட்டத்தில் இருக்காதீர்கள். இறைவனது தனிப் பெருங் கருணையைப் பெறுவதற்கு, நீங்கள் நல்லவர்களின் சகவாசத்தில் இருந்து நற்பணிகளையே ஆற்ற வேண்டும். பின்னர் இறைவன், அவனது கருணையை அறுவடை செய்வதற்கு ஏற்றவாறு, உங்களது பாத்திரத்தை மிகப் பெரியதான ஒன்றாக ஆக்கி விடுவார்!