azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 04 Apr 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 04 Apr 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

Due to the force of gravity objects fall. The gravitational force is invisible to our eyes. Similarly, there are innumerable divine forces operating in this Universe. You must not deny them just because you cannot see them. Only the power of the Divine enables you to speak, see, move and think. All the power of the sense organs are derived from the Divine. In conceit, you may imagine that you are the doer. This is the result of ignorance and folly. Ask the question, what is responsible for existence? The answer is Divinity. Without faith in the Divine, nothing can be achieved. There is no need to seek a reason for this faith – Faith has no season or reason, it is like the love of a child for the mother. The child loves its mother for the sole reason that she is its mother. Develop such confidence and firm faith, you can realize God.('My Dear Students', Vol 2, Ch 8, Jun 15, 1989.)
புவி ஈர்ப்பு சக்தியினால் பொருட்கள் கீழே விழுகின்றன. புவி ஈர்ப்பு சக்தி கண்களுக்குப் புலப்படுவதில்லை.அதைப் போலவே,இந்தப் பிரபஞ்சத்தில் எண்ணிலடங்காத தெய்வீக சக்திகள் இயங்கிக் கொண்டு இருக்கின்றன. உங்களால் பார்க்க முடியவில்லை என்பதால், நீங்கள் அதை மறுக்கக் கூடாது. தெய்வீக சக்தி தான் உங்களைப் பேச,பார்க்க,நடக்க மற்றும் நினைக்க வைக்கிறது. புலன்களின் சக்தி அனைத்தும் தெய்வீகத்திலிருந்து பெறப் பட்டவையே. அகந்தையின் காரணமாக,நீங்களே அனைத்தையும் செய்பவர் என கற்பனை செய்யக் கூடும்.இது அறியாமை மற்றும் மடமையின் விளைவே. நாம் உயிருடன் இருப்பதற்குக் காரணம் யார் என்ற கேள்வியை எழுப்புங்கள். தெய்வீகமே என்பதே அதன் விடை. தெய்வத்தின் மீது நம்பிக்கை இன்றி, எதையும் சாதிக்க இயலாது. இந்த நம்பிக்கைக்கு ஒரு காரணம் தேட வேண்டிய அவசியமில்லை- நம்பிக்கைக்குக் காலமோ, காரணமோ இல்லை, ஒரு குழந்தைக்குத் தாயின் மீதுள்ள அன்பைப் போன்றது இது. ஒரு குழந்தை தாயை, அவள் தாய் என்ற ஒரே காரணத்திற்காகத் தான் நேசிக்கிறது. இப்படிப் பட்ட நம்பிக்கை மற்றும் விசுவாசத்தை வளர்த்துக் கொண்டால், நீங்கள் இறைவனை உணரலாம்.