azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 03 Apr 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 03 Apr 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

When Krishna was placed in the weighing scale, Rukmini brought oneTulasileaf and said, “One may offer a leaf, a flower, fruit, or even just water to God. I offer this Tulasi leaf to You. If it is true that you rescue the person devoted to You, I pray, let this leaf ofTulasibalance Your weight.” The sanctity of sacred thoughts and acts are not understood by many. Rukmini’s offering was filled with devout feeling, so it equaled the weight of Lord Krishna, who is the very Lord of the Universe. Rukmini accomplished this feat through her selfless devotion. What is the significance in the offering of a leaf? Body (deha) is a leaf (patram) with three attributes ofSatva,RajasandTamas. Heart (Hrudaya) is a flower (pushpam). The flower of the heart is pure and sacred. From this flower comes the fruit, mind with its sweet juice. You must offer this to God. ('My Dear Students', Vol 3, Ch 3, Jun 30, 1996.)
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை துலாபாரத்தில் இட்ட போது,ருக்மணி ஒரு துளசி இலையைக் கொண்டு வந்து,''ஒருவர் ஒரு இலை,ஒரு பூ,ஒருபழம் அல்லது வெறும் நீரை இறைவனுக்கு அர்ப்பணிக்கலாம்.நான் இந்த துளசி இலையை உனக்கு அர்ப்பணிக்கிறேன்.உன்னிடம் பக்தி கொண்டவரை நீ காத்து ரக்ஷிக்கிறாய் என்பது உண்மையானால்,இந்த துளசி இலை உன்னுடைய பாரத்திற்குச் சமனாகட்டும் என நான் பிரார்த்திக்கிறேன்'' என்று கூறினாள். புனிதமான எண்ணங்கள் மற்றும் செயல்களின் புனிதத்துவத்தை பலர் புரிந்து கொள்வதில்லை. ருக்மணியின் படைப்பு பக்தி உணர்வுகளால் நிரம்பி இருந்தது ;எனவே, இந்த பிரபஞ்சத்திற்கே இறைவனான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பாரத்திற்கு அந்த துளசி இலை சமனாக அமைந்தது. ருக்மணி இந்த சாதனையை தனது தன்னலமற்ற பக்தியின் மூலம் சாதித்தார். ஒரு இலையை அர்ப்பணிப்பதன் முக்கியத்துவம் என்ன?இந்த உடல்(தேஹம்), ஸத்வ, ரஜஸ் மற்றும் தமோ குணங்களுடன் கூடிய ஒரு இலையாகும் ( பத்ரம்). இதயமே ( ஹ்ருதயா) ஒரு பூ (புஷ்பம்).இதய மலர் தூய்மையானதும் புனிதமானதும் ஆகும்.இந்த மலரிலிருந்து மனம் என்ற சுவையான ரசம் உடைய பழம் வருகிறது.இதையே நீங்கள் இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும்.