azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 01 Apr 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 01 Apr 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

In this world, to receive one thing, you need to give up another. When you want a simple handkerchief, you need to pay rupees ten, only then will the shopkeeper sell it to you. God is a very kindmerchant. If you offer even a small amount of devotion, the Merciful Lord will, in return, shower infinite amount of Grace on you. The poor devotee, Kuchela offered a handful of beaten rice to Lord Krishna and received His blessings in abundance. Queen Draupadi, during a distressful moment, prayed with a pure heart. Because of the little sacrifice she made earlier, Lord Krishna rushed to respond to her call and showered His infinite Grace to protect her. The fruits of action are inevitable and no one can escape them. However you can nullify or modify the consequences to a certain extent, if you become worthy and deserve His Grace. ('My Dear Students', Vol 3, Ch 3, June 30, 1996.)
இந்த உலகில் ஏதாவது ஒன்றைப் பெற வேண்டும் என்றால்,நீங்கள் ஏதாவது ஒன்றை விட்டுக் கொடுக்க வேண்டும்.உங்களுக்கு ஒரு சாதாரண கைக்குட்டை வேண்டும் என்றால், அதற்காகப் பத்து ரூபாயைக் கொடுத்தால் தான் கடைக்காரர், அதை உங்களுக்கு விற்பார்.இறைவன் ஒரு மிகவும் கருணை நிறைந்த வியாபாரி.நீங்கள் ஒரு சிறிது அளவேனும் பக்தியை அர்ப்பணித்தால், கருணாமூர்த்தியான இறைவன் பதிலுக்கு அளவற்ற அருளைப் பொழிந்திடுவான்.ஏழை பக்தனான குசேலன் ஒரு கைப்பிடி அளவு அவலை பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு அளித்து இறைவனின் அளவற்ற ஆசிகளை அடைந்தான். அரசியான திரௌபதி, ஒரு இக்கட்டான கட்டத்தில் , தூய்மையான இதயத்தோடு இறைவனைப் பிரார்த்தித்தாள்.அவள் முன்னர் செய்த மிகச் சிறிய தியாகத்திற்காக, அவளது அறைகூவலுக்காக பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பறந்தோடி வந்து, அவளைக் காக்க தனது அளவற்ற கருணையைப் பொழிந்தார். செயல்களின் விளைவுகள் தவிர்க்க முடியாதவை; எவரும் அவற்றிலிருந்து தப்ப முடியாது. ஆனால், நீங்கள் இறைவனது கருணைக்கு உகந்த மற்றும் ஏற்றவர்களாக ஆகி விட்டால், விளைவுகளை ஒரளவு செயலிழக்கச் செய்யவோ அல்லது மாற்றவோ முடியும்.