azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 29 Mar 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 29 Mar 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

One Sankaranti day, Rukmini, Sathyabhama, Jambavati, Gopikas, and Draupadi among others were with Lord Krishna, joyously munching sugarcane. Krishna, in order to test them, pretended as if His finger was cut. God always tests His devotees. Test is nothing but a taste of God. If the devotee is successful in the test, he/she receives God’s bounteous Grace. God does not conduct tests as a sign of hatred or enmity; He always does it out of intense love and compassion. As soon as Krishna’s finger was cut, it started bleeding. Sathyabhama asked a servant to quickly get a piece of cloth. Rukmini ran herself. Draupadi saw this and immediately tore a piece of her own sari and tied it to Lord Krishna’s thumb to stop the bleeding. Witnessing this, Rukmini and Sathyabama were ashamed that their love and actions did not match Draupadi’s love. Later Lord Krishna showered infinite grace when Draupadi needed it the most.(‘My Dear Students’, Vol 3, Ch 3, Jun 30, 1996.)
ஒரு சங்கராந்தி தினத்தன்று,ருக்மிணி,சத்யபாமா,ஜாம்பவதி,கோபிகைகள் மற்றும் திரௌபதி, பகவான் ஸ்ரீகிருஷ்ணருடன் சந்தோஷமாக கரும்பைச் சுவைத்துக் கொண்டு இருந்தனர்.ஸ்ரீகிருஷ்ணர் அவர்களை சோதிப்பதற்காக, தனது கட்டை விரல் கீறப்பட்டு விட்டதைப் போல நடித்தார்.இறைவன் தனது பக்தர்களை எப்போதுமே சோதிப்பான்,சோதனை என்பது இறைவனது சுவையை அன்றி வேறில்லை.பக்தர் இந்த சோதனையில் வெற்றி பெற்று விட்டால்,அவர் இறைவனின் அளவற்ற அருளைப் பெறுகிறார். இறைவன் இந்த சோதனைகளை,வெறுப்பு அல்லது த்வேஷத்தின் அடையாளமாகச் செய்வதில்லை;அவன் இதை எப்போதும் ஆழ்ந்த ப்ரேமை மற்றும் கருணையின் காரணமாகச் செய்கிறான்.ஸ்ரீகிருஷ்ணரின் விரல் கீறப்பட்ட உடனேயை,இரத்தம் கொட்ட ஆரம்பித்தது.சத்யபாமா,ஒரு வேலையாளை உடனே ஒரு துணி கொண்டு வருமாறு கூறினாள்.ருக்மணி தானே ஓடினாள். திரௌபதி இதைப் பார்த்தாள்; உடனே தனது புடவையின் ஒரு துண்டைக் கிழித்து பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் கட்டை விரலில் இரத்தக் கசிவை நிறுத்துவதற்காகக் கட்டி விட்டாள்.இதைக் கண்ட ருக்மணியும்,சத்யபாமாவும், தங்களது ப்ரேமை மற்றும் செயல்கள் திரௌபதியின் அன்பிற்கு ஈடாக இல்லை என்பதை உணர்ந்து அவமானம் அடைந்தார்கள்.பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தனது அளவற்ற கருணையை,திரௌபதிக்கு மிகவும் தேவைப் பட்ட தருணத்தில் பொழிந்து அருளினார்.