azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 24 Mar 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 24 Mar 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

No object can be enjoyed without undergoing the process of transformation and refinement (Samskara). Take the example of paddy. The paddy that is grown and harvested in the field cannot be consumed as such. It has to be converted into rice through the process of winnowing and thrashing. Once the process is complete, the value of the original paddy increases significantly. The process of transformation makes the object more useful and valuable. The utility value of cotton when spun and transformed into cloth is significantly higher, thanks to the transformation process. Take the example of gold. Again, there is a significant increase in its value when it is transformed to the shiny yellow metal, from its original form in the gold mine. Such being the case, how much more necessary it is for the human being to be transformed? (‘My Dear Students’, Vol 2, Ch 8, Jun 15, 1989.)
எந்த ஒரு பொருளையும்,மாற்றமும், செம்மைப் படுத்தப் படுதலும் (ஸம்ஸ்காரமும்) இன்றி,அதன் சுவையை அனுபவிக்க முடியாது. நெல்லையே எடுத்துக் கொள்ளுங்கள்.வயலில் விளைந்து, அறுவடை செய்யப் பட்ட நெல்லை அப்படியே சாப்பிட முடியாது. அதை அடித்துத் தூற்றி, அரிசியாக மாற்ற வேண்டும்.இந்த முறைக்குப் பின் முன்னர் இருந்த நெல்லின் மதிப்பு குறிப்பிடப்படும் அளவு உயர்ந்து விடுகிறது. இந்த மாறுதல் தரும் முறை ஒரு பொருளை உபயோகமானதாகவும், மதிப்புள்ளதாகவும் ஆக்கி விடுகிறது. பஞ்சின் பயன் தரும் மதிப்பு,திரித்து ,துணியாக நெய்யப்படும் முறையினால் கணிசமாக உயர்ந்து விடுகிறது. தங்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஆதியில் தங்கச் சுரங்கத்தில் அது இருந்த உருவத்தில் இருந்து, பளபளக்கும் மஞ்சள் உலோகமாக மாற்றப்படும் போது,அதன் மதிப்பு கணிசமாக அதிமாகி விடுகிறது.அப்படி இருக்கும் போது, இவற்றை எல்லாம் விட,ஒரு மனிதன் மாற்றம் அடைவது எந்த அளவு அத்தியாவசியமானதாக இருக்க வேண்டும் ?