azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 22 Mar 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 22 Mar 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

The entire visible universe is a cosmic university. At birth, people are akin to animals. Then, parents teach the child how to develop its human faculties. If parents do not undertake this task adequately, the child will remain an animal. The great sages and saints felt that it was not enough to develop the human qualities alone, and therefore envisaged a system of Cultural Training (Samskaras) for the spiritual development of the child. What isSamskara? It is systems of practice by which the bad tendencies in a human being are got rid of and good tendencies are inculcated. They are intended to transform the outward looking tendency (Pravritti) into inward looking tendency (Nivritti).Samskarasalso assist in developing human qualities and eliminating all remnants of animal nature in human beings. (‘My Dear Students’, Vol 2, Ch 8, June 15, 1989)
கண்ணுக்குப் புலப்படும் பிரபஞ்சம் அனைத்தும் ஒரு அண்டமனைத்தும் பரந்த விரிந்த பல்கலைக் கழகமாகும். பிறந்தவுடன் மனிதர்கள் விலங்குகளுக்கு ஒப்பானவர்கள்.பின்னர், பெற்றோர்கள் குழந்தைக்கு மனிதப் பண்புகளை எவ்வாறு வளர்த்துக் கொள்வது என்று கற்றுக் கொடுக்கிறார்கள். ஒருவேளை பெற்றோர்கள் தேவையான அளவு இந்தப் பணியைச் செய்யாவிடில், அந்தக் குழந்தை ஒரு மிருகமாகவே இருக்கும்.தலைசிறந்த முனிவர்களும், ஆன்றோர்களும் மனிதப் பண்புகளை வளர்த்தால் மட்டும் போதாது எனக் கருதினார்கள்;எனவே,அவர்கள் குழந்தையின் ஆன்மீக வளர்ச்சிக்காக ஒரு ''ஸம்ஸ்காரங்கள்'' என்ற கலாசாரப் பயிற்சி முறையை வடிவமைத்துக் கொடுத்தார்கள். ''ஸம்ஸ்காரங்கள்'' என்றால் என்ன?அது, மனிதனில் உள்ள தீய குணங்களைக் களைந்து, நற்குணங்களை கற்பிக்கும் ஒரு பயிற்சி முறையாகும். அவை, வெளிப்படையான நோக்கை (ப்ரவிருத்தி), உள்நோக்கான திருஷ்டியாக ( நிவ்ருத்தி) மாற்றுவதற்காக ஏற்படுத்தப் பட்டவை. ''ஸம்ஸ்காரங்கள்'' மனித குணங்களை வளர்த்துக் கொள்வதற்கு உதவி புரிவதுடன், மனிதர்களில் எஞ்சி இருக்கும் எல்லா மிருக குணங்களையும் நீக்குவதற்கும் உதவுகின்றன.