azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 20 Mar 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 20 Mar 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

TheGopikaslived their lives, doing everything as God’s work. They would get up early in the morning, and chant the name of Krishna even as they put curd in the pot. Then as they began churning curds, they would continuously utter the many names of Lord Krishna. Chanting Krishna’s name was like theShruthi(musical scale), their jingling bangles became the rhythm, the sound of churning was the pitch and what they uttered became a mellifluous song. Where did the butter they churned come from? It came from the curds, though it was not visible in the beginning. Just like one can get butter out of milk, with effort you too who have come from God must merge in Him. Understand this principle well and you can experience Him anywhere and everywhere, all the time.(‘My Dear Students’, Vol 3, Ch 2, March 19, 1998)
ஒவ்வொன்றையும் இறைவனது பணியாகக் கருதி, கோபிகைகள் தங்களது வாழ்க்கையை வாழ்ந்தார்கள்.அவர்கள் அதிகாலையில் எழுந்து, ஸ்ரீகிருஷ்ணரின் நாமத்தை ஜபித்தவாறே, பானையில் தயிரை இடுவார்கள். பின்னர் அவர்கள் தயிரைக் கடைய ஆரம்பிக்கும் போதே, ஸ்ரீகிருஷ்ணரின் பல நாமங்களை இடைவிடாது கூறிக் கொண்டே இருப்பார்கள். ஸ்ரீகிருஷ்ணரின் திவ்ய நாம ஜபமே ஸ்ருதியாக,அவர்களது கை வளைகளது ஓசையே தாளமாக, தயிரைக் கடையும் சலசலப்பே ராகமாகக் கொண்டு, அவர்கள் பேசுவதெல்லாம் ஒரு இனிமையான கானமாக அமைந்தது.அவர்களது கடைசல்களில் வந்த வெண்ணெய் எங்கிருந்து வந்தது? அது முதலில் கண்களுக்குப் புலப்படா விட்டாலும் தயிரிலிருந்தே வந்தது. பாலிலிருந்து எவ்வாறு ஒருவருக்கு வெண்ணெய் கிடைக்குமோ, அவ்வாறே இறைவனிலிருந்து வந்த நீங்களும் கூட, ஆன்மீக சாதனையின் மூலம் அவனுடன் ஒன்றரக் கலக்க வேண்டும்.இந்தத் தத்துவத்தை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்; நீங்களும் இறைவனை எங்கும் எப்போதும் அனுபவிக்க முடியும்.