azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 17 Mar 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 17 Mar 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

God does not exist in any foreign land; do not search for Him anywhere – He lives within your own body. Similarly sin too does not exist in any external place. Both, sin and merit exist in your own actions. Hence perform good actions and speak good words. If your kerchief falls down and someone picks it up for you, you tell him ‘Thank you’, is it not? So too, you must use your tongue to express your gratitude to God. God has gifted us many wonderful things. For example, when it rains, there is plenty of water flowing through canals, rivers, tanks, etc. All the forms of Nature – Earth, Sound, Water, Air and Fire are Forms of God. You must express your utmost gratitude to them. Never forget the good done to you by others – Be a grateful person.(‘My Dear Students’, Vol 1, Ch 7, Apr 10, 2000.)
ஆண்டவன் ஏதோ அன்னிய தேசத்தில் இல்லை; அவனை எங்கெங்கோ தேடாதீர்கள்-அவன் உங்களது சரீரத்திற்குள்ளேயே வாசம் செய்கிறான்.அதைப் போலவே, பாவம் என்பதும் கூட எங்கோ வெளி இடத்தில் இல்லை.பாவம், புண்ணியம் என்ற இரண்டும் உங்களது செயல்களிலேயே இருக்கின்றன. எனவே, நற்காரியங்களைச் செய்யுங்கள்; நல்ல வார்த்தைகளையே பேசுங்கள் . உங்களது கைக்குட்டை கீழே விழுந்து, அதை ஒருவர் எடுத்துக் கொடுத்தால், நீங்கள் அவருக்கு,'' உங்களுக்கு நன்றி '' என்று சொல்கிறீர்கள் இல்லையா? அதைப் போலவே, நீங்களும் உங்களது நாவை இறைவனுக்கு நன்றி கூறப் பயன்படுத்த வேண்டும்.இறைவன் உங்களுக்குப் பலவித அற்புதமான பொருட்களைப் பரிசாக அளித்துள்ளான்.உதாரணமாக, மழை பொழியும் போது, கால்வாய்கள், நதிகள் மற்றும் குளங்கள் போன்றவற்றில் நிறையத் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இயற்கையின் அனைத்து வடிவங்களும் - நிலம் , ஓசை,நீர்,காற்று மற்றும் நெருப்பு-இறைவனது வடிவங்களே. நீங்கள் அவற்றிற்கு உங்களது உளமார்ந்த நன்றியைக் கூற வேண்டும். உங்களுக்கு மற்றவர் செய்த நல்லவற்றை ஒருபோதும் மறக்காதீர்கள்- நன்றியுள்ள மனிதராகத் திகழுங்கள்.